Saturday, February 25, 2012

தன்னிலை விளக்கம் > “கவியன்பன்” அபுல்கலாம்


முழுப் பெயர்:                             அபுல்கலாம் ABUL KALAM
சுருக்கப்பட்டப்பெயர்:                கலாம் (அப்துல் கலாம் என்று தவறான உச்சரிப்பை அனேகர் செய்வதால்..)
பட்டப் பெயர்:                             “கவியன்பன்” (திருவாரூர் கலைக்கல்லூரியில் கலைஞரால் வாய்வழிப் பாராட்டாக வழங்கப்பட்டது)
                                                     புதிதாக நான் பிறந்த ம்ண்ணின் வாசகர்கள் சூட்டியது “ “கவிக்குறள்”
(பட்டங்களைத் தேடி அடியேன் சென்றது கிடையாது; ஆனால் பட்டங்களால் என்னை மதிக்க நாடும் அன்பை மறுப்பதும் கிடையாது)
தகப்பனார் பெயர்:                       ஷைக் அப்துல் காதிர் (ஸ்ரீலங்காவில் வணிகராய் வளம்பெற்று 1957ல் அந்நாட்டை விட்டு வந்து சொந்த ஊரில்
                                                      வணிகம் செய்து நொடித்த பின்னர் இன்று புதல்வர்களின் வளர்ச்சியினைக் கண்டு உயிருடன் உள்ளார்கள்
தாயார் பெயர்                               உம்முல் ஹபீபா (இறந்து விட்டார்கள்) அவர்களின் நினைவால் என் மனம் வாடும்; அதனால் ஒரு கவி பாடும்

சொந்த ஊர்:  தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் , அதிராம்பட்டினம்(ஓர் அழகியக் கடலோரக் கிராமம்)

படிப்பு                                         பி.காம். (வணிகவியல்) 1979 சென்னைப் பல்கலைக்கழகம்/ திருவாரூர் கலைஞர் கலைக் கல்லூரி
                                                   பள்ளியிறுதி வகுப்பும்; புகுமுக வகுப்பும் (பி.யு.சி.)சொந்த ஊரில் படித்தேன்
                                                   பள்ளி மாணவர்த் தலைவனாகவும்; இலக்கிய மன்றத்தலைவனாகவும் இருந்தேன்தொழில்                                    கணக்கர்

அனுபவங்கள்                          ; 30 வருடங்கள் (அயல்நாட்டுப் பணியில் சௌதி அரபிய்யா, அமெரிக்கா, துபை,அபுதபி)

குடும்பம்:  மனைவி மற்றும் ஒரு பெண் , ஒரு ஆண் மக்களுடன் சிறிய- சீரானக் குடும்பம்
                                                   கொஞ்சும் மழலையாக மகள் வழி பேரன்
                                                    மகள் பி,ஏ. ஆங்கில இலக்கியப் பட்டதாரி, மகன் மேனிலைப் பள்ளி முதலாமாண்டு

இலக்கியம்:


1974 முதல் பள்ளியிறுதி வகுப்பில் “யாப்பிலக்கணம்” கற்றுக் கொடுத்தத் தமிழாசானின் தூண்டுதலால் அன்று முதல் இன்று வரை யாப்பிலக்கண மரபுப் பாக்களின் பால் அதிக ஈடுபாடு

பள்ளிப் பருவத்தில் தமிழ் வார இதழ் “தாய்” க்கு கவிதைகள் அனுப்பி உள்ளேன்

பள்ளிப் பருவத்தில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் நாடகத்தில் ஈடுபாடு உண்டு

கவிப்பேரரசு வைரமுத்துவின் நூற்களால் ஈர்க்கப்பட்டு மரபினை விட்டும் மாறி புதுக்கவிதையின் பால் சென்றேன்

முகநூல் . “சந்த வசந்தம்” இணைய தளம் மற்றும் தனி மின்னஞ்சல் வழியாக என் கவிதைகள் பதியப்பட்டுப் பாராட்டுரைகளும் நட்பு வட்டமும் விரிவடைந்தது. (சுமார் 2000 நண்பர்கள்/நண்பிகள்- அனைவரும் என் கவிதையின் இரசிகர்கள்)

இப்படியாக வளர்ந்து வரும் என்னைத் தூக்கி விடவும் மரபுப்பா இலக்கணம் கற்றுக் கொடுக்கவும் இந்நட்பு வட்டம் பெரிதும் உதவியது

அவர்களில்:

இலந்தை சுப்பையர் இராமசுவாமி (என் ஆசானாக அடைந்தேன்) “சந்த வசந்தம்” இணையம் வழியாகநியூ ஜெர்சியில் உள்ளார்கள்)

இராஜ. தியாகராஜன் (முகநூல் வழியாக என் பாக்களைப் பார்த்து எனக்குத் திருத்தம் வழங்கியும்; விருத்தம் எழுத விருப்பமும் ஊடியவர்கள்(புதுச் சேரி)

அதிரை அஹ்மத் காக்கா (என் சொந்த மண்ணின் தமிழறிஞர்) இவர்கள் சொன்ன அறிவுரை:”மரபுப் பாக்களைப் பற்றிப்பிடி; அதனால் தமிழறிஞர்களின் வரிசையில் உனக்கும் ஓர் இடம் உண்டு” என்றார்கள்

இவர்கள் சொன்னது பலித்தது: ஆம். இலங்கை காவியத்திலகம் ஜின்னா ஷர்ஃபுத்தீன் வாப்பா அவர்களால் “நீ மரபுப் பா மட்டுமே யாத்துப் பழகினால் என்னைப் போல் காவியம் படைப்பாய்” என்றார்கள்

முகநூல் வழியாக ஏற்பட்ட ஓர் அற்புதமானத் தொடர்பு: துபை சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குநர் “கலையன்பன்” ரஃபீக் அவர்கள்

இவர்கள் எங்களைப் போன்றோரை ஏற்றிவிடும் ஏணி! ஆம். என் எண்ணத்திரையில் உள்ளவைகள் சின்னத்திரையில் வான் உலா வருவதற்குக் காரண கர்த்தா!

இவ்வண்ணம் எனது நட்பு வட்டம் பெருகியதில், முக நூல் நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்கி “கலாமின் கவிதைகள்” என்றப் பெயரில் ஓர் இணைய தளம் வைத்துள்ளேன் அதன் முகவரி: http://www.kalaamkathir.blogspot.com/

iஇன்றுவரை நூற்றுக்கும் மேலான எண்ணிக்கையில் கவிதைகள் அதில் பதிந்துள்ளேன்.

இன்ஷா அல்லாஹ், அவற்றைத் தொகுத்து நூலுருவில் வெளியிட முதலில் 63 கவிதைகள் மட்டும் தெரிவு செய்து கோவை தகிதா பதிப்பகத்தார் முன்வந்துள்ளனர் (இதன் நிறுவனர் முனைவர் மணிவண்ணன் அவர்கள் முகநூல் மூலம் அறிமுகம் ஆன கவிமுகம்)
இதன் அணிந்துரையை என் ஆசான் இலங்கை காவியத்திலகம் ஜின்னாஹ்ஷர்புத்தீன் அவர்கள் தருவதாக ஒப்புக் கொண்டதும் என் பேறென்பேன்! ஆனால், முன்னர் என்னிடம் வாக்குறுதி கொடுத்த பதிப்பகத்தார் இப்பொழுது அதிகம் பணம் கேட்பதால் எனது நூல் வெளியிடுவதில் பெரிய ஏமாற்றம்; எனவே, யாரேனும் வெளியிட முன் வந்தால் வெளியிடலாம்
 

சிந்திப்பாய் என ஒரு சிந்துப்பா

வள்ளல் நபியை மறத்தல் - நமக்கு
************வஞ்சக வழியைத் திறத்தல்
அள்ளு மழகு முஹம்மத்(ஸல்) - நமக்கு
*************அல்லாஹ் அருளும் சுகமது
கொள்ளி நரகில் விழுதலை- விட்டும்
**********காக்கும் நபியின் வழிகளை
எள்ளி நகைக்கு மிழிந்தோர் - ஈருலகில்
**********எல்லாம் விலகி அழிந்தோர்

கற்பவர் வியக்கும் தெளிவாம் -அறிவுக்
**********கண்களைத் திறக்கு மொளியாம்
அற்புத மறையின் உரையாம் - நபியின்
************அழகிய வழியின் நெறியாம்
நற்குண மலர்கள் மணக்கும் -அவர்களின்
***********நட்பினை விரும்பும் மனமும்
சொற்களி லினிமை கலக்கும் - அந்தச்
**********சொல்வனச் சுவனம் நிலைக்கும்


யாப்பிலக்கணம் --
இது சமநிலைச் சிந்து. ஒவ்வோர் அரையடியிலும் மூன்று சீர்கள் அளவொத்து வரும்

ஆக்கம்; அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)
 
எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com
 
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
                                    

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails