Saturday, August 9, 2014

இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாம் சார்ந்த பதிவுகளையே அதிகம் பதிவிடுகிறோம்?


பல மேற்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனை உள்ளவர்கள் நினைப்பது போல "MUSLIMS ARE NOT MARKETING ISLAM". ஏன் தெரியுமா?

நான் அறிந்த வரையில் இஸ்லாமை எதிர்கும் ஒரு இந்துவுக்கோ, கிரிஸ்தவனுக்கோ அல்லது புத்திஸ்டுகளுக்கோ அவனது வேதவரிகள் தெரிகிறதோ இல்லயோ ஒருசில புனித-குர்ஆன் வசனங்களை தெரிந்து வைத்து இருக்கிறான்.

எப்படி அவனுக்கு தெரிகிறது?

அவனுடய மத போதகர்கள் / மீடியாக்கள் ஒருசில வசனங்களை அதன் சூழ்நிலைகளை விவரிக்காமல் நேரடி வசனபொருளை மக்களிடம் சேர்க்கும் பொழுது அது ஏதிமறை சிந்தனையை மக்களின் மனத்தில் விதைக்கிறது மேலும் எதிர்மறை சிந்தனை எந்த ஒரு மனிதனின் மனத்திலும் நிரந்தரமாக தங்கி விடும் என்பது மறுக்கமுடியா உண்மை. எனவே ஒரு அச்சம் மற்றும் வெறுப்பு அவன் மனத்தை பற்றிக்கொள்கிறது,

அதன் பிறகு அவன் ஒரு இஸ்லாமியனையோ அல்லது இஸ்லாமிய பதிவுகளையோ நிகழ்வுகளையோ அல்லது குர்ஆன் வசங்களையோ பார்க்கும் பொழுது கேட்கும் பொழுது நடுநிலைத்தன்மையை கையாளுவதை இழக்கிறான்.

நான் அறிந்தவரை இஸ்லாமிய வரலாற்றிலும் தற்பொழுதிய காலகட்டத்திலும் இஸ்லாத்திற்கு வந்த பெரும்பாலானோர் இந்த மன நிலையிலிருந்தவர்தான் நான் உட்பட. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. உண்மையை அறிந்தவர் வாய் மூடி இருத்தல் முறையில்லை எனவேதான் எங்களது பதிவுகள் இஸ்லாம் சார்ந்தே இருக்கிறது.
- இரண்டாம் காலிஃபா "உமர் பின் கத்தாப்"
- காலித் பின் வலீத்
- பெரியார்தாசன்
- டச்சு நாடு அரசியல்வாதி "Arnoud Van Doorn"
- அயர்லாந்து இராணுவ பயிற்றுவிப்பாளர் "Daniel Streich"
- யூத எழுத்தாளர் "முஹமத் ஆசாத்"
- பிரிட்டிஷ் எழுத்தாளர் "யுவாநோவ் ரிட்ல்"
- அபூ சூஃபியான்
- ஜோசுவா ஈவந்ஸ்

எண்ணிக்கை என்ன என்பதே கணிக்கமுடியாத ஒன்று. இவர்களில் பலர் மதங்களை வெறுத்தவர்கள், பலர் இஸ்லாத்தை மட்டும் வெறுத்தவர்கள். இன்றய இஸ்லாமியர்களில் 70 வீதத்திற்கு மேல் நேற்று இஸ்லாத்தை எதிர்த்தவன் என்பதுதான் மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை. ஆனால் பின்னாளில் இவர்களால்தான் இஸ்லாம் வளர்ந்தது, வளர்ந்துகொண்டு இருக்கிறது. பிறவி முஸ்லிம்கள் பெரும்பாலோனோர் இஸ்லாத்தை ஆழமாய் அறிவதோ பின்பற்ற நினைப்பதோ இல்லை. ஆனால் புதிதாய் இஸ்லாத்திற்கு வரும் அன்பர்கள், அதிலும் இஸ்லாத்தின் முதல் எதிரியாய் தன்னை பிரகடன படுத்தி கொண்டவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டபின் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்தவர்கள்.

மக்கள் மத்தியில் பல அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் இஸ்லாம் மீது, எடுத்துக்காட்டாக,

- இஸ்லாமியர்கள் அதிகம் அதிகம் குழந்தை பெற்று கொள்ளுகிறார்கள், அதனாலேயே அவர்கள் எண்ணிக்கை வளர்கிறது.
- இஸ்லாம் வன்முறையை போதிக்கிறது, அவர்கள் தீவிரவாதிகள், மற்ற மதங்கள் அப்படி இல்லை.
- முகம்மது ஸல் அவர்களை பற்றி கணக்கிலா குற்றச்சாட்டுகள்
- உலகத்தில் இருவருக்குள் சண்டை எங்கு நடந்தாலும் அதில் ஒருவர் இஸ்லாமியராகவே இருக்கிறார்.
- இஸ்லாமியர்கள் மற்றவர்களை மதம் மாற்றவே நினைகின்றனர்
- மத நல்லிணக்கத்தை இஸ்லாமியர்கள் விரும்புவதில்லை.
மேலும் பல..
- ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம்
- மற்றவரின் மத நம்பிக்கையை மதிப்பதில்லை

இவைகள் உண்மையில் நூறு சதவிகிதம் தவறான புரிதல். எம்மை பற்றி தவறான புரிதலும் பிரச்சாரமும் மக்கள் மத்தியில் நிலவுகையில் அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பதென்பது மூடர் செயலல்லவா? இவை சார்ந்த விளக்கங்களை மக்களுக்கு அளிப்பது இஸ்லாமியர்களின் கடமை எனவே நாங்கள் இஸ்லாம் சார்ந்த பதிவுகளையே பதிவிடுகிறோம். எங்களில் ஒரு சிலர் உணர்சியின் காரணமாகவும் பொறுமைஇன்மையின் காரணமாகவும் விரக்தியின் காரணமாகவும் கடினமான வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு, ஆனால் எதிரிலிருப்பவர் நீததத்தை கடைபிடித்தால் 99 வீதம் இஸ்லாமியர்கள் அமைதியை கடை பிடிப்பதில் இருந்து தவறுவதில்லை. அந்த ஒரு சதவிகிதம் விதிவிலக்கு. இந்த விதி விலக்கு அனைத்து மதத்துக்கும் நாட்டிற்கும் பொருந்தும், துரோகிகளும், முன்கோபிகளும், அவசரகாரர்களும், ஒன்றும் அறியா அல்லது அறைகுறை அறிவாளிகளும் எங்கும் எதிலும் கலந்தே இருக்கின்றனர்.

மேலும் இஸ்லாம் என்ன போதிக்கிறது என்பதை நன்கு கற்று அறிந்தவரிடம் சென்று அறிவதே முறை. 5ம் வகுப்பு மாணவனிடம் போய் உனக்குதான் ஆசிரியர் சொல்லி தந்து இருக்கிறாரே உனது பாடங்களை விரிவாக எனக்கு சொல்லித்தா என்பதில் அர்த்தம் எதும் இல்லை. அவனது புரிதல் குறைவாகத்தான் இருக்கும், ஆசிரியரை அணுகுவதுதான் முறை. அதுபோல் சாதாரண முஸ்லிமின் நடைமுறை செயல் பாடுகளை தவிர்த்து இஸ்லாமிய அறிஞர்களிடம் சென்று இஸ்லாமை அறிந்துகொள்ளுங்கள்.

 Rafeequl Islam T

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails