மரியாதைக்குரிய ஷம்சுல் ஹூதா அஜ்ரத் அவர்கள் இறந்து விட்டார்களென செய்தி வந்தது ............அவர்களின் ஊருக்கு செல்ல வேண்டும் கடைசி தொழுகையில் கலந்து கொள்ள வேண்டுமென நிறைய நண்பர்கள் வேண்டினர் ..ஆசித்தனர்
மாணவத் தலைவனான என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன் பிரின்ஸ்பாலிடம் கேட்க யோசிக்கிறேன் ..ஆகையால் அத்தனை வகுப்பிலிருந்தும் தலா 1 ஆள் வாங்க மொத்தமா கேட்கலாமென .......சரியென வந்தனர்
எனக்கும் தைரியம் அவரிடம் கேட்க ....வந்தார் பிரின்ஸ்பால்
சார் ....சொல்லுப்பா என்னா கூட்டமா வந்திருக்கிங்க ...
இல்ல மெளத்துக்கு போலாம்னு 1 நாள் லீவு கேட்டு .....
என்னா .....னு கேட்டாரு
அவ்வளவு தான் ஒருத்தனையும் காணோம் ..துண்டக்காணோம் துணியக்காணோம் னு எஸ்கேபாயிட்டானுக......
நான் மாட்டிக்கிட்டேன்னு தான் நினைச்சேன் ..............பட்
பிரின்ஸ்பால் நிலையை புரிந்து கொண்டவர் மற்ற ஆசிரியர்களோடு கலந்து நிர்வாகத்திடம் தெரிவித்து 1 மணி நேரத்தில் சொல்கிறேன் ..........போப்பா யென்றதும் மூச்சு வந்துருச்சு.
காலேஜ் விடுமுறையில்லாது இருந்தாலும் விரும்பியோர் மட்டும் கடைசி பயணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டோம்.
வருடம் 1987 ஜனவரி யென ஞாபகம்....இடம் .வடக்குமாங்குடி.
கட்டுரை :இஸ்கந்தர் பராக் Iskandar Barak
Iskandar Barak
-------------------------------------------------
ஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு,அல்லாவின் உயரிய படைப்பின் பார்வை,உயரினங்களின் உண்ணதம்,
வீடியோ பார்க்க இங்கு க்ளிக் செய்யுங்கள்
அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா
1 comment:
மாஷாஅல்லாஹ் ....மறக்கமுடியாத ஞானவான் ஷம்சுல்ஹூதா ஹஜ்ரத் அவர்கள்
நடந்தால் சிங்கம் போன்ற தோற்றத்தை இறைவன் அவருக்கு தந்திருந்தான்
கல்வி பேசும் பேச்சில் வீரம்
Post a Comment