வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு
நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை
முதலில் கணித்து,
ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய்
இந்த மண்ணில்
முதலில் நிமிரிந்து நின்றவர்தான்
வங்காளத்தை ஆண்ட
சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை
அவர் சந்தித்த பிளாசிப் போர்தான்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய்
இம்மண்ணில் நடந்த
முதல் இந்திய சுதந்திரப்போர்…!
பெரிய யுத்தம் அது..!
இப்போரில் கைதாகும்
இந்திய வீரர்களை அடைப்பதற்காக
ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே
ஆங்கிலேயர்களைக் கைது செய்து
அடைத்த மாவீரர்தான்
சிராஜ்-உத்-தௌலா.
- தாஜுதீன்
----------------------------------------------------------------------------
இஸ்லாத்தின் வரலாற்றில் 'பத்ர்' போர் மிகவும் முக்கியமானது
இது தற்காப்புப் போர்
இஸ்லாத்தின் தற்காப்புப் போரில் இறந்த சஹாபாக்கள் மிகவும் முக்கியமானவர்கள் . முதலில் தற்காப்புப் போரில் தங்கள் உயிரை விட்டவர்கள் அவர்கள் .அதனால் அவர்கள் முக்கியமானவர்களாக கருதப் படுகின்றார்கள்
இந்திய சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்கள் தங்கள் உயிரை விட்டவர்கள் அதிகம் .அதிலும் முதலில் முஸ்லிம்கள் தான் ஆங்கிலேயனுக்கு எதிராக கல்கத்தாவில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தார்கள்
ஆனால் அவர்களது சரித்திரம் முக்கியப் படுத்தப் படுவதில்லை
- முகம்மது அலி
No comments:
Post a Comment