Saturday, August 30, 2014

அடித்து வளர்ப்பதின் மூலம் வன்முறை முறையினை பிஞ்சு வயதிலேயே ஆழ விதைக்கிறோம்

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள்
குழந்தைகளுக்கு ஓதிக் கொடுக்கும் ஆசிரியர்கள்
குழந்தைகளை பாடம் வராததால்
குழந்தைகள் குறும்பு செய்வதால் ..
குழந்தைகளை அடிப்பதை இன்னும் தொடர்கிறார்கள்
சில குழந்தைகளுக்கு வீட்டிலும் , பாடம் படிக்கப் போகும் இடத்திலும் அடி வாங்குவது வேதனையானது
பாரிசில் குழந்தைகளை அடித்தால்
அந்த குழந்தைகளை அரசு தன் வசம் வைத்து வளர்க்க ஆரம்பிக்கும் மற்றும் அடித்தவர்களையும் தண்டிக்கும்

நேரில் கண்ட காட்சி
ஓதிக் கொடுப்பவர் ஆறு வயது பையனை அடித்தார்
அடிக்காதீர்கள் என்றேன்
தவறு செய்தால் அடித்தால்தான் திருந்துவான் என்றார்
அடித்தால் ஓத வர மாட்டான் என்றேன்

ஓத பையன்கள் வருவதில்லை என்று மட்டும் சொல்கின்றார்கள்
ஏன் வருவதில்லை என்று சிந்திப்பதில்லை


கருத்துக்கள்

 பாரீஸ் கிடக்கட்டும், நம்ம நாட்டுல கைதிகளை கூட அடித்து துன்புறுத்தக் கூடாதுன்னு சட்டம் இருக்கிறதே.
Taj Deen

இவர்களுக்கு ஒரு ஏனோ தெரிவதில்லை.....
அடித்து வளர்ப்பதின் மூலம் வன்முறை முறையினை பிஞ்சு வயதிலேயே ஆழ விதைக்கிறோம் என்றும், அன்பு காட்ட மறுப்பதின் மூலம் அடுத்த தலைமுறைக்கு அன்பு என்பதை ஏட்டளவிலே போதிக்கிறோம் என்/றும்....
Rafeeq Friend 

குழந்தைகளை தடம் பதியும் அளவிற்கு அடிக்கும் ஆசிரியர்களை மட்டுமல்ல, பெற்றோரையும் கண்டித்தாக வேண்டும்.

ஒரு முறை ஒரு வேலைக்கார சிறுமி தவறு செய்த பொழுது “மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!” என்று கூறிய கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்

“உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.” என்றும் கூறினார்கள்.

எனவே வயதும் தவறும் கருத்தில் கொண்டு...
ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளை அன்பால் தண்டிக்கவேண்டும். அடியால் தண்டிக்கக்கூடாது.
P.s. Abdul Salam

அழகான கருத்து
Sadeek Ali Abdullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails