நல்ல நாள் கெட்ட நாள் என்பது கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை கேட்டும், படித்தும் மனதில் படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம் செய்து நன்மையை அடைந்துக் கொள் .
பிறக்கும்போது சுதந்திரமாக பிறந்தாய் பின் அன்பினால் பிணைக்கப் பட்டாய்.
உன் சுதந்திரம் மற்றவருக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்
கொடை பிடிக்க உனக்கு உரிமை உண்டு ஆனால் அந்த குடை மற்றவர் மூக்கில் குத்தாமல் இருக்கும் வரைதான் உனக்கு சுதந்திர உரிமை கொடுக்கப் பட்டுள்ளது. கடமையை செய்யாதவனுக்கு உரிமை கிடையாது.
கொண்டாட்டங்கள் உற்சாகப் படுத்துவதாக இருக்க வேண்டும் .அதுவே உபத்திரவம் தருவதாக இருந்தால் உனக்கு பக்குவம் வருவதற்கு முன்பே கொடுக்கப் பட்ட சுதந்திரம் என நினைக்க முற்பட்டு அதனால் உன் சுதந்திரம் பறிக்கப் பட்டுவிடும்.
உலகம் சுற்றுவதுபோல்தான் அரசியல் வாழ்வும் .அது மாறி, மாறி வரும் . தனி மனிதனது ஆட்சி கொடுமையானால் அதனை மக்கள் எடுத்துக் கொள்வர் . மக்களும் மாக்களாக மாற அராஜகம் செய்ய முற்படும் பொது திரும்பவும் அடக்கு முறை பயன்படுத்தப் பட்டு ஆட்சி மாறும் . முடியாட்சி ,பிரபுக்கள் ஆட்சி , கொடுங்கோலன் ஆட்சி பின்பு மக்களாட்சி .இந்த சுழலும் முறைதான் சரித்திரம் . நமக்கு கிடைத்த சிறந்த சுதந்திரத்தினை (நம் நலம் கருதி சில கட்டுப் பாடுகளுடன் அமையப் பெற்றதனை) இழந்து விடாமல் பார்த்துக் கொள்வது அனைத்து மனிதனின் கடமை . நம் கையில்தான் அது உள்ளது .அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது நம் கடமை .
தவறு செய்யாமல் இருப்பதும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதும்தான் உண்மையான சுதந்திரத்தின் மாண்பு.தவறு நடக்கும் போது ஒதுங்கிப் போனால் உன் சுதந்திரம் பறிபோகி விடும்.
ஓட்டுரிமை அனைவருக்கும் உண்டு . படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடில்லை. நமக்கு சமைக்க தெரியாது ஆனால் சமைத்த உணவை சுவைக்கத் தெரியும். ஆள்பவர் ஆட்சி நற்பயன் கொடுக்கவில்லையென்றால் நாம் பட்ட துயரமும் துன்பமும் அறிவோம் .இதனை அறிய படிப்பு மட்டும் அவசியமில்லை. அதனால் தான் அனைவருக்கும் உரிமை வழங்கப் பட்டுள்ளது . கால ஓட்டத்தில் அடக்கு முறையில் வாடிய மக்களும் கல்வியைப் பெற்றிடுவர். படித்தவன் தவறை பாதுகாவலோடு செய்வான் , (இன்று நடக்கும் பெரிய தவறுகள் அனைத்தும் கற்றோர்கள்
செய்தவைகளாகவே உள்ளன .மனது பண்பட வேண்டும் . வழிகாட்டி உயர்வோராக இருக்க வேண்டும் .தலைவன் வழியே மக்கள் வழியாக மாறி விடுகின்றது)
இறைவா! நீ மக்களுக்கு நல் வழி காட்டி விட்டாய். நாங்கள் தவறு செய்து விட்டோம். நீ மன்னிப்பவன் மற்றும் மன்னிப்பை விரும்புபவன் நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு . இனி உன் வழியிலேயே உயர்வான நற்காரியங்கள் செய்து நன்மையை அள்ளிக் குவிகின்றோம் அதற்க்கு உன் அருளை நாடி நிற்கின்றோம். உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.
No comments:
Post a Comment