Thursday, August 28, 2014

முகநூல் புலம்பல் [ பக்தி 2 ]


முகநூல் புலம்பல் - 8

நிலைத் தகவலைவிட
பரப்பரப்பானது
பின்னூட்டங்களுக்காக
காத்திருக்கும் நேரம்.
--------------------------
முகநூல் புலம்பல் - 9

நம்மை எதிரியாக நோக்குபவரும்
நண்பராகவே இருப்பர்.
------------------------------------
முகநூல் புலம்பல் - 10

எல்லா வைரஸும்
உடம்பைத் தாக்கும்
பேஸ்புக் வைரஸ்
மனதைத் தாக்கும்.
----------------------------------

முகநூல் புலம்பல் - 11

முகநூல் என்றாலும்
முகம் காட்டாதவர்களும்
இருக்கிறார்கள்.
-------------------------------------
முகநூல் புலம்பல் - 12

நல்ல பதிவுகளைவிட
நல்லா இருக்கும் பதிவர்களுக்கு
மவுசு கிளிக்கும்.
------------------------------------------
முகநூல் புலம்பல் - 13

பதிவர்கள் மூன்று வகை.

தன் கருத்தைப் பதிவர்கள்

பிறர் பதிவைப் பகிர்கிறவர்கள்

பிறர் பதிவை நகலெடுத்து

தன் பெயரில் பதிவர்கள்.
----------------------------------------------------
முகநூல் புலம்பல் - 14

பதிவின் போக்கை
பின்னூட்டங்கள்
திசை மாற்றிவிடும்.

தொடரும்..,

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails