Friday, August 29, 2014

நதிநீர் இனைப்பு / அமீருல் மூமினீன் கால்வாய்

நதிநீர் இனைப்பு பத்தி ரொம்ப நாளா பேசிக்கிட்டும்,அதற்காக ஒரு கமிட்டி அமைச்சு சாதக பாதகங்களை இன்னும் இன்னும் ஆஞ்சுக்கிட்டே இருக்காங்க.

இப்ப அப்படியே வரலாற்றைப் பின்னோக்கி போய் பார்ப்போம்,

அரபுதேசம்,மதீனா நகர்,ஹிஜ்ரி 18,

கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.

நாடு மழையின்றி கடுமையானப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தலைவர் யோசிக்கிறார்கள்,

அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட சிரியா மற்றும் எகிப்து மாகாணங்களிருந்து உணவு தானியங்களை வரவழைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த இடங்களிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதென்றால்
கரடு முரடான பாலைவனத்தை கடந்துவர காலம் பிடிக்கும். ஆனால் மக்கள் உணவில்லாமல் மடிந்து விடுவார்களே,

கலீபா அவர்கள் எகிப்து கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

நைல் நதியையும் செங்கடலையும் இணைக்க ஒரு கால்வாய் வெட்டும்படி கட்டளை இட்டார்கள்.

கடிதம் கண்டவுடன் இட்டக் கட்டளையை ஏற்று எகிப்தில் புஸ்தாத் என்னும் இடத்திலிருந்து செங்கடலுக்கு ஒரு கால்வாய் அமைக்கப்பட்டது.

அந்தக் கால்வாய் வழியே இருபது கப்பல்களில் ஜித்தா துறைமுகத்துக்கு உணவுபொருட்கள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மதீனாவுக்கு தரைவழி வந்துச் சேர்ந்தது.
மக்களின் பஞ்சமும் தீர்ந்தது.

இந்தக் கால்வாயின் நீளம் 69 மைல் தூரம்
அந்தக் காலத்தில் ஆச்சரியப்படும் வகையில் ஆறே மாதத்தில் கால்வாய் வெட்டப்பட்டது.

இந்தக் கால்வாய்க்கு அமீருல் மூமினீன் கால்வாய் என்று பெயர்பெற்றது.
---------------------
இன்றைக்கு தீர்க்கமானத் தலைமை, தொலைநோக்கு பார்வை, தலைமையின் கட்டளையை சிரமேற்கொண்டு மக்களின் இன்னல் போக்கிய மாபெரும் மனிதர்கள் நவீன சாதனங்கள், பொருளாதார வசதி, திறமையான பொறியாளர்கள் எல்லாம் இருந்தும் .எது தடுக்கிறது...

 Mohamed Salahudeen
                                                             Mohamed Salahudeen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails