தொழுகை உடல் சார்ந்த வழிபாடு; உண்ணா நோன்பும் அவ்வாறுதான். 'ஸகாத்' எனப்படும் கட்டாயக் கொடை ஒரு பொருளாதார வழிபாடு. புனித ஹஜ் உடல், பொருள் இரண்டும் சார்ந்த வழிபாடு.
இந்த வழிபாடுகள் மூலம் இறைக்கட்டளையை நிறைவேற்றும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கின்ற அதே வேளையில், தமக்கும் தம்முடன் வாழும் சகமனிதர்களுக்கும் அவர் நன்மை செய்கிறார்.
தொழுகையால் உடல் தூய்மையும் உளத்தூய்மையும் அடைகிறார். தாம் செய்த குற்றங்களை எண்ணி இறைமுன் அழுகிறார். இனிமேல் குற்றமிழைக்கமாட்டேன் என்று சபதம் ஏற்கிறார். குற்றங்களிலிருந்து விடுபடுவது அவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நன்மையல்லவா?.
உண்ணா நோன்பால் குடலுக்கு ஓய்வு; அதனால் உடலுக்கு ஆரோக்கியம். மதிய வேளையில் பசியும் தாகமும் அவரைவாட்டும்போது, பட்டினியின் கொடுமையை அனுபவிக்கிறார். ஏழை எளியோருக்கு தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உந்தப்படுகிறார்.
'ஸகாத்' எனும் கட்டாயக் கொடை, சுயநலத்தையும் கருமித்தனத்தையும் செல்வர்களிடமிருந்து அகற்றுவதற்கான அருமையான வழிபாடு. உன்னை அண்டி வாழும் ஏழைகளுக்கு உன் செல்வத்தில் பங்கு உண்டு என்று சொல்கின்ற இறைக்கட்டளைதான் ஸகாத். ஆண்டுக்கு இரண்டரை விழுக்காடு தொகை ஏழை எளியோருக்கு ஒவ்வொரு செல்வரும் கட்டாயமாக வழங்கிவந்தால், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்பார்கள்.
Showing posts with label இறைவழிபாடு. Show all posts

Saturday, October 12, 2013
Saturday, June 23, 2012
படிக்கட்டுகள்... ஏற்றம் - 15
இறைவழிபாடு Vs பணம் சம்பாதித்தல்
மனிதனின் சறுக்கல் அவன் இந்த உலகத்தில் எதை முக்கியம் என்று நினைக்கிறானோ அதில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கிறது. ஒரு பாக்டீரியா பேரன் பேத்தியோடு குடியிருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு ஏன் வயிற்றை இப்படி வலிக்கிறது எனும் ஒரு நோயாளியின் கேள்விபோல்தான் , பிரச்சினைகளை சொந்தமாக தேடி தன் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிட்டு பிறகு "எனக்கு ஏன் இறைவன் இப்படி சோதிக்கிறான்" என்று புலம்புவது ஒரு ரகம்.
வாழ்க்கையில் முன்னேறுவது என்பது முக்கியம் என நினைக்கும் சூடு சுரணை உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வரும் அதில் பணம் வசப்படும், வாக்குக்கு மரியாதை இருக்கும் அப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் வந்து விட்டதாக கற்பனை செய்து கொண்டு தான் சொல்வதெல்லாம் சரி, தான் செய்வதெல்லாம் சரி என்று ஆட்டம் போட்டால் சறுக்கும் காலம் வந்தால் முதலில் ப்ரூட்டஸ்களை சந்திக்க தயாராக வேண்டியதுதான். அதற்கு பிறகு வளர்த்த கிடா, நெஞ்சில் பாய்ந்துவிட்டது என புலம்பி புண்ணியமில்லை. [ கிடா நெஞ்சில பாயும் அளவுக்கு அவ்வளவு குள்ளமாவா இருக்கீங்கனு யாரும் கேட்டமாதிரி தெரியவில்லை]
இன்றைய நவீன சூழல் மனிதனை தடம்புரளச்செய்யும் எல்லா வசதிகளையும் அவன் கையில் வந்து கொடுத்து விட்டு போயிருக்கிறது.

Labels:
இறைவழிபாடு,
பணம் சம்பாதித்தல்
Subscribe to:
Posts (Atom)