வெற்றி நிச்சயம்
இன்றில்லாவிட்டால் நாளை !
*************
தாயிப் -
மக்காவின் பக்கத்தில்
உயர்ந்து நிற்கும்
மலை நகரம் !
பச்சையும் பசுமையும்
கிளை விரித்து
மணம் பரப்பும்
மலர் நகரம் !
இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மஹ்மூது நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்கள் ஓரிறைக்
கொள்கையை எடுத்துச் சொல்ல தாயிப் மலைக்கு நடந்தே சென்றார்கள் ! தாயிபின் ஆட்சியாளர்கள்
அப்துல் யலீல்,
மஸ்வூது , ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள். மூவரும்
மூர்க்கர்கள் ! அவர்களிடம் " அல்லாஹ் ஒருவன் ; நான் அவன்
தூதர் " என்று நபிகள் சொன்னார்கள். " மலையின் மீது ஏறி வர ஒரு கோவேறு கழுதை
கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் " என்று அவர்கள் சிரித்தார்கள்.
சிறுவர்களை ஏவி விட்டு சீதள நபி மீது கற்களை வாரி எறிந்தார்கள் !
பாதை காட்ட வந்த பண்பாளரை
பைத்தியம் என்றார்கள்
பைத்தியக்காரர்கள் !
தாயிப் வாசிகள்
நபிகளாரை
நடக்கவிட்டு நகைத்தார்கள்
ஓடவிட்டு அடித்தார்கள் !
பெருமானார் பாதம் பட்டால்
குணமறியாப் பாவிகளோ
பூப்பாதம் கிழிந்து
புது ரத்தம்
பாய்ந்து வரச் செய்தார்கள் !
மூன்றுகல் தூரத்தை நபிகள் பெருமான் ஓடி ஓடி கடந்து வந்தபோது ஒரு திராட்சை தோட்டம்
நபிகளை உள்வாங்கிக் கொண்டது. மாண்பான மக்கத்து மனிதர் ஒருவரின் தோட்டம் அது. அவர் முஸ்லிமாக
இல்லாவிட்டாலும் தன் மண்ணின் மைந்தருக்கு மரியாதை தந்தார். கனிகள் கொடுத்து உபசரிக்க
பணியாளுக்கு உத்தரவிட்டார்.
அந்த தோட்டக்காரர் கொண்டு வந்து வைத்த திராட்சைக் கனிகளை எடுத்து நபிகள் "பிஸ்மில்லாஹ்
" எனச் சொல்லி உண்டார்கள் . அதைக் கண்டு வியந்துபோன பணியாளரின்உள்ளம் அண்ணலார்
சொன்ன பிஸ்மில்லாஹ்வின் விளக்கத்தால் ஈமானில் நனைந்து போனது.
பணியாளர் உள்ளத்தில்
விழுது விட்ட இஸ்லாத்தின் வெற்றி கண்டு
தாயிப்பயணத்தில் வேதனைப்பட்ட
அண்ணலின் இதயம் இனித்தது...
இதழ்கள் இறைவனைத் துதித்தது !
"
தாயிப் மக்களை சபித்து விடுங்கள் " என்றார் கூடவே வந்த ஜைது !
"
நான் இவர்களை உய்விக்க வந்தவன்
சபிக்க வரவில்லை...
வல்லவன் அருளால்
தாயிப் மக்கள் திருந்துவது திண்ணம்
இதுவே என் எண்ணம் ! "
பெருமானார் வாக்கு பலித்தது.. நபிகளின் காலத்திலேயே தாயிப் வாசிகள் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டார்கள்.. இன்று தாயிப் மிக அழகான மலை நகரமாக இஸ்லாமிய சிகரமாகத் திகழ்கிறது!
முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய
நாடுகளும் இறையருளால் விரைவில் முஸ்லிம் நாடுகளாக மாறும்....
எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம்
தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் இன்ஷா அல்லாஹ் விரைவில் இஸ்லாமியத் தென்றல் வீசும்
. சாந்தியும் சமாதானமும் அரசாளும் !
வெற்றி நிச்சயம் இன்றில்லாவிட்டால் நாளை !
************* தாயிப் - மக்காவின் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் மலை நகரம் ! பச்சையும்
பசுமையும் கிளை விரித்து மணம் பரப்பும் மலர் நகரம் ! இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் மஹ்மூது
நபிகள் பெருமானார் ( ஸல் ) அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்ல தாயிப் மலைக்கு
நடந்தே சென்றார்கள் ! தாயிபின் ஆட்சியாளர்கள் அப்துல் யலீல், மஸ்வூது , ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள்.
மூவரும் மூர்க்கர்கள் ! அவர்களிடம் " அல்லாஹ் ஒருவன் ; நான்
அவன் தூதர் " என்று நபிகள் சொன்னார்கள். " மலையின் மீது ஏறி வர ஒரு கோவேறு
கழுதை கூட இல்லாத உம்மையா இறைவன் நபியாக அனுப்பினான் " என்று அவர்கள் சிரித்தார்கள்.
சிறுவர்களை ஏவி விட்டு சீதள நபி மீது கற்களை வாரி எறிந்தார்கள் ! பாதை காட்ட வந்த பண்பாளரை
பைத்தியம் என்றார்கள் பைத்தியக்காரர்கள் ! தாயிப் வாசிகள் நபிகளாரை நடக்கவிட்டு நகைத்தார்கள்
ஓடவிட்டு அடித்தார்கள் ! பெருமானார் பாதம் பட்டால் பட்ட இடம் வளம் கொழிக்கும் குணமறியாப்
பாவிகளோ பூப்பாதம் கிழிந்து புது ரத்தம் பாய்ந்து வரச் செய்தார்கள் ! மூன்றுகல் தூரத்தை
நபிகள் பெருமான் ஓடி ஓடி கடந்து வந்தபோது ஒரு திராட்சை தோட்டம் நபிகளை உள்வாங்கிக்
கொண்டது. மாண்பான மக்கத்து மனிதர் ஒருவரின் தோட்டம் அது. அவர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும்
தன் மண்ணின் மைந்தருக்கு மரியாதை தந்தார். கனிகள் கொடுத்து உபசரிக்க பணியாளுக்கு உத்தரவிட்டார்.
அந்த தோட்டக்காரர் கொண்டு வந்து வைத்த திராட்சைக் கனிகளை எடுத்து நபிகள் "பிஸ்மில்லாஹ்
" எனச் சொல்லி உண்டார்கள் . அதைக் கண்டு வியந்துபோன பணியாளரின்உள்ளம் அண்ணலார்
சொன்ன பிஸ்மில்லாஹ்வின் விளக்கத்தால் ஈமானில் நனைந்து போனது. பணியாளர் உள்ளத்தில் விழுது
விட்ட இஸ்லாத்தின் வெற்றி கண்டு தாயிப்பயணத்தில் வேதனைப்பட்ட அண்ணலின் இதயம் இனித்தது...
இதழ்கள் இறைவனைத் துதித்தது ! " தாயிப் மக்களை சபித்து விடுங்கள் " என்றார்
கூடவே வந்த ஜைது ! " நான் இவர்களை உய்விக்க வந்தவன் சபிக்க வரவில்லை... வல்லவன்
அருளால் தாயிப் மக்கள் திருந்துவது திண்ணம் இதுவே என் எண்ணம் ! " பெருமானார் வாக்கு
பலித்தது.. நபிகளின் காலத்திலேயே தாயிப் வாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.. இன்று
தாயிப் மிக அழகான மலை நகரமாக இஸ்லாமிய சிகரமாகத் திகழ்கிறது! முஸ்லிம்களை அழிக்கத் துடிக்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இறையருளால்
விரைவில் முஸ்லிம் நாடுகளாக மாறும்.... எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை
வெறியாட்டம் தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் இன்ஷா அல்லாஹ் விரைவில் இஸ்லாமியத் தென்றல்
வீசும் . சாந்தியும் சமாதானமும் அரசாளும் !
No comments:
Post a Comment