இந்தக் கவிதையின் சிறப்பு என்னவென்றால் ஒரே சொல் இரண்டு பொருளில் வரும். மடி - மடி என்ற இரண்டு சொற்களும் வேறு வேறு பொருள் உடையவை. அதே சமயம் அத்தனை வார்த்தைகளும் ஒத்த இசையுடைய வார்த்தைகள். இதை இயைபுத் தொடை என்று யாப்பிலக்கணம் கூறும்.
*
மன்னித்தால் நீயென் மடி
மறுப்பதனால் சேர்ந்தே மடி
அனுதினமும் அடிமேல் அடி
அமைதி என்றால் ஆறே அடி
உள்ளத்தின் உயர்வின் படி
உண்மையான உறவைப் படி
அன்பகலா செல்லக் கடி
அதில் மாயை ஏதுக் கடி
சண்டையிட்டால் சிதையும் குடி
சகிப்பினையே மருந்தாய்க் குடி
குயில் கூவ வேண்டாம் தடி
குடியேறும் மரணத் தடி
Showing posts with label அமைதி. Show all posts

Sunday, May 19, 2013
Saturday, January 8, 2011
மனைவியின் அருமை அறிய முதுமை தேவை
முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள் ,கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ ,முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள் லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .
எனது குளிர்ந்த கை மீது மற்றவரின் உள்ளங்கை வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .
அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது.
(ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால் அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது .)
காலமெல்லாம் உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது அதிகமாகவே உணர்கின்றேன்.
"நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்" என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான் அவளுக்கு கொடுத்த ஆறுதல் ....!
அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை... மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .

Subscribe to:
Posts (Atom)