தெய்வத்திடம் வேண்டாமல் தன் சக்தியை நம்பி ஆற்றைக் கடக்கத் திட்டமிட்டவன் தன்மீது
அபார நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டால்
அவனும் வெற்றியடைய முடியாது.
அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று தவறாக நினைக்கும் முட்டாளைவிட
தன் முயற்சியால் வெல்வேன் என்று இறுதிவரை உயிர் வதைத்துப் போராடுபவனின்
வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். அவனையே இறைவன் காப்பாற்றுகிறான் என்று இறை நம்பிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அதே சமயம், தன் மீதுள்ள நம்பிக்கை எந்த ஒரு சமயத்திலும் தனக்குக் குறையும் வாய்ப்பினைப் பெற்றால் அவனைச் சுற்றியர்வகளின் உந்துதலைப் பெறவேண்டும்
அதோடு அனவது சுயவலியும் வைராக்கியமும் மூர்க்கம் தர வேண்டும் அப்போதுதான் வெற்றி விருந்தாகும்.
எப்படியாயினும் வேண்டுதல் வேண்டுமென்றுதான் ஆகிறது. எவனொருவன் எதைத் தன் உயிர் பிளந்து அதன் உள்ளே விதைக்கிறானோ அதை அவன் அடைந்தே தீருவான்
அத்தனை சக்தி வலிமையான எண்ணங்களுக்கு இருக்கின்றன. எண்ணமே எவருக்கும் எல்லாமுமாய் இருக்கிறது.
ஒரு எண்ணம் நிறைவேற அழுத்தமான நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை எந்த வழி வந்தாலும் வெற்றி என்பது உறுதிதான். ஆகவே, வேண்டுதல் வேண்டும்தான்
No comments:
Post a Comment