Sunday, October 24, 2010

இணையத்தில் வலை வீச்சு ! ?

வலை வீசித் தேடல், வலையில் சிக்கிட்டான், வலைத்துப் போட்டாங்க இப்படியாக 20 வருடங்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் தலைப்பில் அல்லது அன்றைய ஊடங்கங்களில் செய்திகள் வந்திருப்பதை யாவருக்கும் ஞாபகமிருந்திருக்கும். சரி அதுக்கென்ன இப்போவென்று பார்க்கும் windowவை minimizeசெய்ய வேண்டாம்.சமீபகாலமாக எல்லோராலும் பேசப்படும் புலம்பப்படும் வார்த்தை நெட்வொர்கிங்க் (networking) இதனை நம்மவர்களின் நிகழ்வுகளில் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சு பார்த்துட்டு இருந்தேன் அதன் விளைவுதாங்க இங்கே.

வீட்டில் நெட் வேலை செய்யவில்லை இப்படியும் புலம்பல் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலில் எழத்தான் செய்கிறது அந்த நெட் (net) என்று எதைச் சொல்கிறார்கள் இவர்கள் வலைத்தளங்கள் அல்லது தனிதூது வாயாடி தங்களுடைய கணினியில் தெரியவில்லை அல்லது வேலையை செய்யவில்லை என்பதால்தானே இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் அதன் பின்னால் என்னதான் சிக்கல் இருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாது இதுக்காக நம்மவர்கள் படுத்தி எடுக்கும்பாடு இருக்கிறதே சொல்லி மாலாது ! இதனை தனிக்கோர்வையாக எழுதனும்.

அதுவல்ல இன்றைய மக்கள் பேசும் நெட்வொர்கிங் ? அப்போ என்னதான் நினைக்கிறாங்க !

மெய்யாலுமே நல்ல வெளக்கமா மக்களுக்கு ஒரு பதிப்பு எழுதலாம்னு இருக்கும் போது மாத்தியோசிக்கச் சொன்ன கவிக் காக்கா இங்கே நெனப்புல வந்துட்டாங்க அதானலதான் ரூட்டு மாறிடுச்சுங்க.

நட்புகளின் நெட்வொர்க்குன்னா (friends network) இருவரோ அல்லது அதற்குமேலோ இருப்பவர்களின் கூட்டுதான் இங்கேயும் நெட் துண்டிப்பு இருக்கும், அல்லது சிலருக்குள்ளேயே அதிவேக இணைப்பாக இருக்குக்கும் அதுவே நிறைய நன்மைகளையும் கொண்டுவரும் அதுபோல் வேண்டாத வைரஸ்களும் உள்ளே நுழைந்து சீரழிக்கும். இன்றோ ஆணுக்கும் பெண்ணுக்குமென்று நட்பு வலைச் சிக்கலில் மாட்டித் தத்தளிக்கும் இளசுகள் மட்டுமா பார்க்கிறோம் மருமகன் மருமகள் எடுத்த பெருசுங்களும் இவ்வலைக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

குடும்பங்களுக்கிடையான நெட்வொர்க் (family network) இரு குடும்பங்கள் மட்டும்தான் என்றில்லாமல் அவர்களின் கிளைக் குடும்பங்களும் இதிலே உள்ளடக்கம், ஒவ்வொரு குடும்பங்களுக்கு இடையே அவரவர்களின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் அன்றாட நிகழ்வுகள் வேறுபடுவதும், வீட்டிலிருப்பவர்களுக்கு இடையேயான நெட்வொர்க்கில் சிக்கலும் உண்டு சீறிப்பாயும் வேகமும் உண்டு, இந்த நெட்வொர்க்கு அறுபடுவதும் மீண்டும் சரிசெய்வதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான். இந்த நெட்வொர்க்கிற்குள் கணக்கிடலங்காத நட்புகளானாலும் வெறுப்புகளானாலும் வென்றிடவும் வீழவும் செய்யும்.

சரி, இன்றைய சூழலில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் மற்றொரு நெட்வொர்கிங் "சோஸியல் நெட்வொர்க்கிங்" - "சமூக பிணைப்பு"ன்னு இங்கே சிக்கித் தவிக்கும் இளசுகளும் பெரிசுகளும் படுத்தும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை, இதன் சாதக பாதகங்களை நாம் யாவரும் அறிந்திருக்கிறோமா ? இல்லை அறியாமலே அதனுள்ளே உலாவருகிறோமா ? இதனை நிச்சயம் அலச வேண்டும்.

இவ்வகை சமூக பிணைப்புகள் (social networking) இன்றைய நிலையில் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, இங்கே முதலில் ஆரம்பிப்பது பொய்தான் அதனை நிஜமாக்கப் அவர்களும் படும் பாடு இருக்கிறதே சொல்லிமாலாது, இதன் வலைக்குள் சிக்கியவர்களின் தனித்தன்மை சின்னா மாகிவருதை அவர்களாளே உணர முடிவதில்லை அப்படி இதன் போதை எல்லா வற்றையும் மறைத்து அடிமையாக்கி விடுகிறது.

இந்த சமூக பிணையம் (social networking) வரவினால் சமுக கட்டுக்கோப்பும் தனித்தன்மையும் சீர்செட்டு போவது ஒருபக்க வாதமாக இருக்கும்போது, இதனால் எல்லையில்லா வருமானத்தை கொட்டிக் குவிக்கும் இதனுடைய உரிமையாளர்கள் சூதாட்டம் எப்படி நடந்தேறுகிறது என்பதை விலாவாரியாக பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...

என்னடா இவனும் தொடரும்னு போடப்போறானேன்னு யோசிக்காதீங்க வேற வழியில்லை நேரம் அமையும் போது மிதமிருக்கும் பதிவும் வரும்...

-அபுஇபுறாஹீம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails