பூனையைவிட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால், கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உலகமே ஒப்புக் கொள்ளும்! தமிழ்நாட்டு மக்களை மரணபயத்தின் பக்கம் கொசுக்கள் மெள்ள நகர்த்திக்கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
எங்கே பார்த்தாலும் மர்மக் காய்ச்சல். சிலர் மலேரியா என்கிறார்கள். பலர் சிக்கன்குனியா என்கிறார்கள். டெங்குவில் இது ஒருவகை எனச் சொல்லப்படுகிறது. யானைக்கால் வியாதியில் கொண்டு போய் விடும் என்ற பயம் இருக்கிறது.
நடையைத் தளர்த்தி காய்ச்சல் வந்தவரின் வாழ்க்கையை ஓரத்தில் இருத்தி உட்கார வைக்கிறது. குழந்தை, பெரியவர் என வயது வித்தியாசம் இல்லை.
ஆண்,பெண் பேதம் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சிறு கிளினிக் வாசல்களிலும் திருவிழாக் கூட்டம்தான். மலேரியா, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் என என்ன பெயரிட்டு அழைத்தாலும் அவை ஐந்தும் கொசுக்களால் வருபவைதான்.
"
No comments:
Post a Comment