ஐக்கிய அமீரக நாட்டில் 17 இலட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் ஏற்படும் இயற்கை மரணத்தில் பெருன்பான்மையான மரணங்கள் மன அழுத்த நோய்களால் ஏற்படுபடுவதாக கூறப்பட்டுள்ளது.
அங்குள்ள இந்திய தூதரக பதிவுகளின் படி 2009ஆம் ஆண்டு மட்டும் 403 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 71 சதவீதம் அடைந்துள்ள இயற்கை மரணங்களில் பெருன்பான்பவை மன அழுத்தாலே நேர்ந்த மரணங்களாக அறியப்படுகிறது.
அபுதாபியில் ஈ.டி.ஏ அஸ்கான் என்ற நிறுவனத்துடன் அமீரக தூதரகம் இணைந்து மகாத்மா காந்தி நினைவு நாளில் நடத்திய கருத்தரங்கதில் இந்திய தூதரக அதிகாரி எம்.கே.லோகேஷ் "தூதரகத்தில் உள்ள சமுதாய நல பிரிவில் பெறப்படும் மனக்குறைகளில் சொந்த குறைகளுக்கான பதிவுகள் 10 சதவீதம் மட்டுமே வருகிறது" என்றுள்ளார். மேலும் "இங்குள்ள தொழில் துறை உரிமையாளர் தங்கள் தொழிலாளிகளின் மன ஆரோக்கியததை நிச்சயப்படுத்தும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
பக்கவாதம், நீரழிவு, இருதய நோய்கள் போன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள் மரணங்களுக்கான காரணங்களாகும்.
பக்கவாதம், நீரழிவு, இருதய நோய்கள் போன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள் மரணங்களுக்கான காரணங்களாகும்.
No comments:
Post a Comment