தேவையான பொருட்கள் :
முட்டை - 5
கேரட் - 1
பீன்ஸ் - 4
சிறிய வெங்காயம் - 20
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - காரத்திற்க்கேற்ப
மஞ்சள்தூள் - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - அரை கப்
மல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
கேரட்டைத் துருவிக்கொள்ளவும். சிறிய வெங்காயம், பச்சைமிளகாய் 2, பீன்ஸ் 4, ஆகியவற்றை மிகச் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்திலிட்டு உப்பு போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் முட்டையை அதில் உடைத்து ஊற்றி கலக்கிக் கொள்ளவும். முட்டையை உடைக்கும் போது பாதியாக உடைத்து விடாமல் மேல்புறமாக சிறிதளவு துளை போட்டு கவனமாக உடைத்துக் கொள்ளவும். பிறகு முட்டை ஓட்டை உடைந்து விடாமல் கழுவி வைத்துக் கொள்ளவும்.
மைதா மாவை பேஸ்ட் போல கலக்கிக்கொள்ளவும். பின்னர் கலக்கி வைத்துள்ள முட்டைக் கலவையை முட்டை ஓட்டில் முக்கால் பாகம் ஊற்றவும். முட்டை ஓட்டின் திறந்த பாகத்தைச் செய்து வைத்துள்ள மைதாமாவு பேஸ்ட்டைக் கொண்டு மூடிக் கொள்ளவும். இதேபோல் எல்லா முட்டைகளையும் செய்துக் கொள்ளவும்.
இந்த முட்டைகளை இட்லி பாத்திரத்தில் தட்டில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கி தேங்காய் கலவையை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது மல்லியிலை தூவி இறக்கிவிடவும்.
பிறகு வேக வைத்த முட்டையை உரித்து குழம்பில் போடவும்.
சுவையான கலக்கல் முட்டை குருமா தயார்.
குறிப்பு :
* முட்டையை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். தண்ணீரில் போட்டு வேக வைத்தால் மைதாமாவு பேஸ்ட் கரைந்துவிடும்.
* தேங்காயோடு நான்கு பாதாம் பருப்பைச் சேர்த்து அரைத்துக் கொண்டால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்.
* கரம் மசாலாவுக்குப் பதிலாக சோம்புத்தூள், சீரகத்தூள் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
No comments:
Post a Comment