Friday, April 22, 2011

வாசிப்பதை நேசிப்போம் - இன்று உலக புத்தக நாள்

இன்று ஏப்ரல் 23  உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நல்ல புத்தகம்  ஒரு நல்ல நண்பனுக்கு  சமம் என்பார்கள்.
ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ் போன்ற புகழ்பெற்ற இலக்கியவாதிகள், 1616 ம்  ஆண்டு  ஏப்ரல்  23ல் மறைந்தனர். இலக்கியத்தில் இவர்களது பங்களிப்பை நினைவு கூரும்  வகையில், ஏப்ரல்   23ம் தேதியை, உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக யுனஸ்கோ அறிவித்தது.
இந்நாள் உலக அளவில் 1995ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன.

இந்த நாளின் மற்றொரு நோக்கம், இளைய தலைமுறையினரும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான். இந்த நாளில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சிகள், புதிய புத்தகங்களை வெளியிட்டு அறிமுகம் செய்தல், சிறப்பு கலந்துரையாடல் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன.

சிறப்பான புத்தகங்களை எழுதும் நூலாசிரியர்களுக்குப்  பாராட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன .

இந்தியாவில் இந்த நாளை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. குறிப்பாக மாணவர் சமுதாயம் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த நாளை கொண்டாட வேண்டும் .

இந்த நாளை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் அனைவருக்கும் 'இந்நேரம்' தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
Source : http://www.inneram.com/2011042315803/today-world-books-day-let-us-cultivate-reading-habbit

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails