எதையெல்லாம் இஸ்லாம் செய்யக்கூடாது என்று போதிக்கிறதோ அதையெல்லாம் செய்யக்கூடியவர்களே நம்மில் அதிகம் !.
.எதைக்கூர்ந்து நோக்கினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு நோக்குங்கள் .இஸ்லாம் நமக்கு தவறிழைக்க ஒருபோதும் கற்றுத்தரவில்லை !..
.அடுத்தவர் பசி உணரச்செய்த மார்க்கம் !..
.வட்டி வாங்குவது அறவே கூடாது என்று அடுத்தவர் வலி உணரச்செய்த மார்க்கம் !...
அடுத்தவர் வீட்டினுள் நுழையுமுன் மூன்று முறை அனுமதி கேட்டும் ...மறுக்கப்பட்டால் உள்ளே நுழைவதை தடைசெய்த மார்க்கம் !...
.ஒரு பெண் ஒரு ஆணையோ .ஒரு ஆண் ஒரு பெண்ணையோ ...ஏறிட்டு நோக்கும்போது மனசு சலனப்படுவதை தவிர்க்க விழிகளை ...அதன் பார்வையை தாழ்த்திக் கொள்ளச்செய்யுங்கள் என்று வலியுறித்தின மார்க்கம்!...
தவறுகள் செய்ய மனதில் தூண்டுதல் உணர்வுகள் தலை தூக்க எத்தனித்தால் மனதை ஆன்மீகத்தின் பால் செலுத்த ஆரம்பித்து விடுங்கள் .....உங்கள் மனம் உங்கள் சொல் கேட்கும் !...
பிற மனிதருக்குத் தெரியாமல் மனிதத் தவறுகள் நடக்கலாம் .இஸ்லாத்தை பின்பற்றுகிற நமக்கு இறைவனுக்கு தெரியாமல் எதுவுமே சாத்தியமில்லை என்பதும் மனதில் ஊடுருவும் !மனசாட்சிக்கு கட்டுப்படுவோம் .....நிறைய தவறுகளை தவிர்த்துக் கொள்ள முடியுமே !...
J Banu Haroon

No comments:
Post a Comment