மரணங்களை அநுதினமும் சந்திக்கும் மனிதனே வாழ்க்கை சுகங்களை தேடி
அலைகிறான். தோல்விகளின் வலிகளை சுமந்து கொண்டே வெற்றியின் படிகளில் காலடி
எடுத்து வைக்க துடிக்கிறான்.
உலக பற்றில்லாத வாழ்க்கை சுகம் தருமா?
சூபித்துறவிகள் அவையில் நடந்த ஒரு உரை யாடல் நம்மையும் சிலிர்க்க வைக்கிறது.
"அறிவாம்! ஞானமாம்! இறைக்காதலாம்!
சூபியாம்! மெஞ்ஞானியாம்!
எல்லாம் சுத்த பித்தலாட்டம்!
ஏமாற்று வேலை, கடைந்தெடுத்த பொய்.
மனிதனால் எப்படி இறைநேசன் ஆக முடியும்.உலக ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு இறைவனை எப்படி தியானிக்க முடியும்.
கந்தல் துணிகளை கட்டுவது தான்
இறை பக்தியின் அடையளமா...!
இல்லை, பட்டனி கிடந்து உடலை
வருத்தினால், மெஞ்ஞானத்தின் திறவு கோல் கைக்கு அகப்படுமா.......!
என் கண்களுக்கு இவை எல்லாம் போலித்தனமாகவே படுகிறது.
இந்த இறைக்காதல் பற்றி நீங்கள் என்ன நினைக்கி றீர்கள்?"
அதிருப்தி அடைந்த சூபியானவர்
பக்கத்தில் இருந்தவரிடம் கிண்டலாக கேட்டார்.
"இறைக் காதலை பற்றி அறிய
வேண்டுமானால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.அதையும் மனம் உவந்து கொடுக்க வேண்டும். கொடுத்தாலும் இறைவன் அதை அங்கீகரிக்க வேண்டும்.
நீங்கள் காணும் என் எளிமைக் கோலம்
நான் அதிக விலை கொடுத்து வாங்கியது தான். இறைக்காதல் என்னில் பொங்கி வழிவதற்கு இதுவே காரணம்."
மற்றவர் பதில் சொன்னார்.
'சுத்த ஆண்டி கோலத்தில் இருக்கும் நீர் என்ன உம்மை அரசன் என எண்ணிக் கொண்டீரோ!!'
கேள்வி கேட்டவர் சற்று நக்கலாகவே அடுத்த கேள்வியை எழுப்பினார்.
"ஆமாம்...
ராஜன்! ராஜாத்தி ராஜன்!!
இந்த பக்கிரி கோலத்தை வெகுமதியாக பெற நான் கொடுத்த விலை மிகவும் அளப்பரியது.
எனது சாம்ராஜ்யம் தான் இதற்காக நான்
கொடுத்த விலை.
அந்த அளவு நான் கொடுத்ததால் தான் இந்த அளவுக்கேனும் என்னால் பெற முடிந்தது. வாங்கும் பொருளின் அருமை கொடுக்கும் விலையை பொறுத்தே அமையும்."
மிகவும் அமைதியாக பதில் சொன்னார் மன்னராக இருந்து சூபித் துறவியாக மாறிய சூபி ஞானி இப்ராஹிம் இப்னு அத்ஹம்
No comments:
Post a Comment