Sunday, October 23, 2016

ஒய்வு - உற்சாகம் - உழைப்பு ....! /ராஜா வாவுபிள்ளை

ஓடியோடி உழைப்பதில்
கிடைக்கும் உற்சாகம்
கொஞ்சம் சாய்ந்து கொண்டால்
கிடைக்கும் ஒய்வு
உறங்காது உழைப்பதில்
கொள்ளும் உற்சாகம்

கொண்டுவரும் முன்னேற்றம்
உழைத்த களைப்பில்
கொள்ளும் ஒய்வு
உடலுக்கு உரம் சேர்க்கும்
வாழ்க்கையில் எழுச்சித்தரும்
உழைப்போடு
உற்சாககமும் சேர்ந்துகொள்ள
உயரங்கள் தொட்டுவிடு தூரத்தில்
கிட்டவந்து மண்டியிடும்
இடையிடையே ஒய்யவையும் சேர்த்துக்கொண்டால்
புத்துணர்ச்சி ஒட்டிக்கொள்ளும்
ஆரவாரமில்லா உழைப்பு
காலாகாலமும் கூடவரும்
ஆதாயத்தை அள்ளித்தரும்
காலத்தே எடுக்கும் ஒய்வு
ஆரோக்யத்தை அனுகூலமாகும்
உற்சாகத்தை உந்தித் தரும்
உழைப்பு
ஒய்வு
உற்சாகம்
மொத்தத்தில் இன்பத்தின்
இருப்பிடங்கள்

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails