Saturday, October 22, 2016

முதிர்ந்த ஆன்மிக நிலை என்பதென்ன?


1). மற்றவர்களைத் திருத்த முனைவதற்கு முன் உங்களைத் திருத்த முயல்வதே ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

2). மற்றவர்களை (அவர்தம் குறைநிறைகளுடன்) இயல்புமாறாமல் ஏற்பது ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

3). ஆன்மிக முதிர்ச்சி என்பது, அவரவர் கோணத்தில் அவரவர் சரி என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

4). ஆன்மிக முதிர்ச்சி என்பது "போகட்டும்" என்று விட கற்றுக் கொள்வதாகும்.

5). ஆன்மிக முதிர்வு நிலை என்பது, உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதும், அதே சமயம் கொடுக்கும் இன்பத்திற்காக கொடுத்துக் கொண்டிருப்பதும் ஆகும்.


6). ஆன்மிக முதிர்ச்சி என்பது, நீங்கள் செய்வதெல்லாம் உங்கள் மனநிம்மதிக்கே என்று புரிந்துகொள்வதாகும்.

7). ஆன்மிக முதிர்வுநிலை என்பது, நீங்கள் எத்தனை புத்திசாலி என்பதை உலகிற்கு நிரூபிப்பதை நிறுத்திக் கொள்வது ஆகும்.

8). ஆன்மிக முதிர்ச்சி என்பது அங்கிகாரங்களுக்கு அலையாமல் இருப்பதாகும்.

9). ஆன்மிக முதிர்ச்சி என்பது மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதாகும்.

10). ஆன்மிக முதிர்ச்சி என்பது உங்களுக்குள் உணரப்படும் நிம்மதி ஆகும்.

11). ஆன்மிக முதிர்ச்சி என்பது தேவைக்கும் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொண்டு விருப்பத்தை விட்டுவிடும் தன்மை ஆகும்.

12). உலகாதாய பொருள்களுடன் உங்கள் மகிழ்ச்சியை பிணைத்துக் கொள்ளாமலிருப்பதில் தான் ஆன்மிக முதிர்ச்சி இருக்கிறது.

நிம்மதியான மகிழ்ச்சியான ஆன்ம வாழ்வுக்கு வாழ்த்துகிறேன்.


தமிழில்:  Fakhrudeen Ibnu Hamdun

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails