Monday, October 31, 2016

நேற்று நடந்தது ....

தற்போது இங்கே கத்தரில் சூடு மறைந்து சாயங்காலம் இதமான காற்றும் நல்ல சுகமான சீதோஷண நிலையுமிருப்பதால் நான் 5.30 மணி தொழுகையான மஃரிப் தொழுதுட்டு இரண்டு மணி நேரம் ஆபீஸூக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்து வருவது வழக்கம் ..அப்படி அமர்ந்திருக்கையில் நேற்று தொழுகை முடிந்த பிறகு எத்தியோப்பியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச்சேர்ந்த சிலர் என்னை சந்திக்க வந்தார்கள் .............வந்தவர்கள்
தாங்கள் மாதம் இருமுறை விஷேஷ பிறார்த்தனை செய்வதாகவும் அதற்கு மைக் வெளியே உபயோகப்படுத்த நீங்கள் அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டார்கள்

அதற்கு அனுமதி மறுத்த நான் ....இப்படி சொன்னேன்
நானும் முஸ்லிம் உங்களோடு தான் தொழுகிறேன் அறிவீர்கள் எது கேட்டாலும் முறையாக செய்து தருகிறேன் மற்றவர்கள் போல முடியாதென சொல்வதில்லை காரணம் எனக்குத்தெரியும் எதை எந்தளவு செய்யனுமென்று ................ஆனால்
இந்த விஷயத்தை பொறுத்தவரை நான் பொறுப்பாளியாகவே நடவடிக்கையெடுக்க முடியுமே தவிர முஸ்லீமாக நினைத்து ஒரு தரப்புக்கு மட்டும் சரி சொல்லிட முடியாது ..................காரணம்
கேம்பில் பலதரப்பு மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் யாவருக்கும் நான் பொறுப்பாளன் .........இரவு குறிப்பிட்ட
நேரம் வந்துவிட்டாலே அதிகமானோர் வேலை செய்த களப்பில் பாவங்கள் உறங்கிவிடுகிறார்கள் நீங்கள் மைக் வைத்து பேசவீர்களானால் அவர்களின் மறுநாள் வேலைக்கு அது இடஞ்சலையே தரும் ..................இங்கே
நமக்கு வேலை தான் முக்கியமே தவிர இதெல்லாம் முக்கியமில்லை ........................ஆகவே
மைக் ...5 நேர தொழுகைக்கு பாங்கு சொல்லவும் ஜமாத் தொழுகும் போது தொழுகைக்குமே பயன்படுத்தவேண்டும்
அதுபோக ........வேரெதுக்கும் பயன்படுத்த அனுமதியில்லை மன்னிக்கவும் ...யென்றேன்.
புரிந்தவர்கள் ....ஏதும் சொல்லவில்லை தங்களின் விளக்கம் எங்களுக்கு முழு திருப்தி ..ஜஸாக்கல்லாஹ் யென சொல்லிவிட்டு போய்விட்டனர்.
இங்கே நாம் வேலை செய்வதற்கே கஷ்டப்பட்டு விசா வாங்கி பிள்ளைகுட்டிகளை விட்டு வந்துள்ளோம் ..அதை
ஒழுங்காய் செய்வோம்...சரிதானே நண்பர்களே.
இனிய இரவு


Iskandar Barak







---------------
Aslam Mohamed Aslam  ஜமாத் தொழுகைக்கே மைக் தேவையில்லை. உள்ளே தொழுபவர்களுக்கு இமாம் கிராஅத் ஓதுவது கேட்டால் போதும். ஜூம்மாவிற்கு கூட்டம் அதிகமாக வெளியே நின்றால் மைக் போடலாம். மற்றபடி உள்ளே நடப்பது வெளியே இருப்பவர்களுக்கு கேட்க அவசியமில்லை. தங்கள் நடவடிக்கை சரியே.
--------------
Iskandar Barak இல்லை ...பஜ்ர் மஃரிப் இஷா ..ஜமாத் வெளியேயும் ஆட்களிருப்பார்கள் காரணம் கூட்டம் அதிகம் அதனால் தான் இதை குறிப்பிட்டேன் இல்லையெனில் தாங்கள் சொல்வதே சரி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails