மக்கள் தொகை பெருகத் துவங்கியது. வணிகம் வளரத்துவங்கியது. போக்குவரத்தும் பயணிக்கும் பாதைகளும் பலவழியாக கடல், ஆகாய, இருப்புப்பாதை மற்றும் பாரம்பரிய தரைவழியாக வும் மக்களுக்கும் பொருட்களுக்கும் திறக்கத் தொடங்கியது.
மண்ணின்மேல் மனிதனுக்கு ஆசை பெருகியது. அழிக்க ஆரம்பித்தான் அடங்காதவர்களை. பாரம்பரிய ஆயுதம் கொண்டு அழிப்பது அத்தனை இலகுவல்ல மனிதனுக்கு. செயற்கையை துணை சேர்த்தான். வெடிமருந்தை (கன் பவுடரை) கண்டுபிடித்தான். மனிதனின் அழிவின் தொடக்கம் அங்கே ஆரம்பித்ததது.
இப்போது மனிதனை அழிக்க இயற்கையின் கனிமங்களை களவாடி பெருமளவில் கனரக ஆயுதங்கள் செய்கிறான்.
அழிவை தொடங்கிய மனிதனாலேயே அதை நிறுத்தவும் முடியும்.
இறைவன் அருள் வேண்டுவோம்.
ஆயுதம் அழிப்போம்.
மனிதம் செய்வோம்.
மானுடம் காப்போம்.
இயற்கை உலகையும் உயிர்களையும் வாழவைக்கும்.
உலக ஆயுத ஒழிப்பு தினத்திற்காக எழுதிய பதிவு.
(வெடி பதிவு அல்ல )
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.
No comments:
Post a Comment