Monday, March 3, 2014

ஸலாம் (முகமன்)

காலை வணக்கம்
மாலை வணக்கம்
இரவு வணக்கம்
பிரியும் போது குட் பை
நமஸ்தே இன்னபிற

இத்தனயும் ஒன்று சேர
அத்தனையும் விட உயர்வு

இறைவன் அருளால் உங்கள் மீது இறைவன் அருளால் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என வாழ்த்துதல்
முஸ்லிம்கள் அதன் பொருளாக உலகமெங்கும் சொல்வது 'அஸ்ஸலாமு அலைக்கும்'
இதனை தமிழில் 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் ' எந்த இனத்தவரும் சொல்லலாம் .எந்த நேரத்திலும் சொல்லலாம்.

வாழ்த்துவதில் கூட காலை .மாலை .இரவு பாகுபாடு எதற்கு !

ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும்.
. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு. (அல்குர்ஆன்: 36:58).

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்(அல்குர்ஆன்: .4:86.)

“ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; (அல்குர்ஆன்: 6:54.).

அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails