முஸ்லிம்கள் பலருக்கும் இது அதிர்ச்சியான செய்தி. பெரும் அதிர்ச்சியான செய்தி. முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்து ஆம் ஆத்மி தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது வட இந்திய மார்க்க தலைவர்களின் ஆதங்கமாக இருந்தது. இந்த காரணத்தினாலேயே காங்கிரஸ்க்கு மாற்றாக ஆம் ஆத்மியை பரிந்துரைப்பதில் அவர்களுக்கு மிகுந்த குழப்பம் இருந்து வந்தது.
பல்வேறு நெருக்குதல்களுக்கு பிறகு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்த தங்கள் கண்ணோட்டத்தை நேற்று தெளிவுபடுத்தியுள்ளது ஆம் ஆத்மி. மதரீதியான இட ஒதுக்கீட்டை தாங்கள் மேற்கொள்ள போவதில்லை என்று அறிவித்துள்ள இக்கட்சி, இதற்கு காரணமாக, சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை சுட்டி காட்டியுள்ளது. அதே நேரம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்பது சட்டத்திற்கு புறம்பானதா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்லியுள்ளனர். சட்டத்திற்கு புறம்பில்லாத ஒன்றை சட்ட சிக்கல்களை காரணம் காட்டி நிராகரிக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாடு சச்சார் கமிட்டி ஆவணங்களுடன் நேரடியாக முரண்படுகின்றது. மதரீதியான ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை என்றாலும், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்க போவதாக கூறியுள்ள இக்கட்சி, அனைத்து சமூகத்திலும் உள்ள விளிம்பு நிலை மனிதர்கள் முன்னேற வகை செய்யும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்கள் பலருடைய குழப்பதற்கு இதன் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், பாட்லா ஹவுஸ் வழக்கில் (போலி என்கவுண்டர் என்று சமூக அமைப்புகளால் தீவிரமாக கூறப்படும் வழக்கு) சிறப்பு விசாரணை தேவை என்ற கோரிக்கையையும் ஆம் ஆத்மி நிராகரித்துள்ளது. இது மற்றொரு பின்னடைவே..
ஆதாரங்கள்:
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
1 comment:
ஆம் ஆத்மி யை ஆதாித்த முஸ்லிம்களின் நிலை என்ன?
Post a Comment