புலப்படுகிறது...!
நல்லவையோ... கெட்டவையோ...
நம்மைக் கடந்து போய் விட்டன...!
இந்தக் கணிதம்
எத்தனையோ ஆண்டுகளாய்
இடைவெளி இன்றி நடக்கின்றன...!
நல்லதைத்தான் நாடுகிறோம்
அதுவும்
நம் கைவசம் வந்து சேரலாம்...!
அல்லதும் கூட அனுமதியின்றி
வந்தும் குவியலாம். ..!
தவிர்க்க நமக்கு
சக்தி
எதுவும் தரப்படவில்லை...!
அதையும்
அனுமதிக்கக் கூட
ஆற்றலுமில்லை. ..!
காலக் கணக்கன்
கணக்குப் புத்தகத்தில்
ஒரு பக்கம் கழன்று விட்டது...!
புதிய பக்கம் புலப்படுகிறது...
கடைசி வரிவரை என்னவெல்லாமோ
எழுதப் படலாம்.....!
ஏற்றுக் கொள்வோம்....! வாழ்த்துச் சொல்வோம்.....!
Hilal Musthafa

No comments:
Post a Comment