வறுத்த கோழியை வாயில் போட்டு உண்பதில் மன நிறைவு
மனைவியை அருகில் அமர்த்தி அதனை உண்பதில் சுகம்
உண்ணும்போது பிச்சைக்காரன் கதவை தட்டி
உண்பதற்கு கேட்பதில் வெறுப்பு
வெறுப்பு வந்ததால் பிச்சைக்காரனை விரட்டி அடிக்கும் மனம்
ஈயா மனம் காலப் போக்கில் ஏழ்மையை தரும்
ஏழ்மையின் நிலை மனைவியையும் பிரிக்க வைக்கும்
பிரிந்த மனைவி மறுமணம் செய்ய நேரும்
மறுமணத்தில் வந்த கணவனுடன் வறுத்த கோழியை உண்ணும் நிலை
உண்ணும்போது பிச்சைக்காரன் கதவை தட்டி உணவு கேட்க
வறுத்த கோழியை மனமிரங்கி கதவைத் திறந்து
உணவு கேட்டவருக்கு வறுத்த கோழியைக் கொடுத்து
கதறி அழுது திரும்பும் பரிதாப நிலை
வந்த பிச்சைக்காரர் ஈயாத மனம் கொண்டு ஏழ்மை தழுவி
தன்னையும் விடுவித்த முதல் கணவன்
-----------------------------------------------------------------------
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.[குர்ஆன்: Surah An-Nahl, Ayat 112]
“Allah gives an example: There was a town, secure and content with its sustenance coming in plenty from every place. Then it turned ungrateful to the bounties of Allah; so Allah made it taste hunger and terror (that covered it) like a garment, as recompense for what its people used to do.” [Quran: Surah An-Nahl, Ayat 112]
----------------------------------------
The Messenger of Allah (sal Allahu alaihi wa sallam) used to supplicate thus: “Allahumma inni a'udhu bika min zawali ni'matika, wa tahawwuli 'afiyatika, wa fuja'ati niqmatika, wa jami'i sakhatika (O Allah! I seek refuge in You against the declining of Your Favours, passing of safety, the suddenness of Your punishment and all that which displeases You).” [Riyadh as-Saliheen]
No comments:
Post a Comment