இதனால் சகலமானவர்க்கும்.....!!
---நிஷா மன்சூர்
மக்கள் உறுதியான செயல்பாடுகளை எதிர்பார்க்கிறார்கள்,
மழுப்பலான பதில்களையும் சப்பைக்கட்டுகளையும் வெறுக்கிறார்கள்.காங்கிரசின் கடந்தகால முதுகெலும்பற்ற செயல்பாடுகளுக்கும் மொண்ணையான எதிர்வினைகளுக்கும் கிடைத்திருக்கும் சவுக்கடிதான் இந்த தேர்தல் முடிவுகள்.
தமிழகத்திலும் இப்படித்தான், திமுகவின் சமரசங்களும் சொல்விளையாட்டுகளும் மிகுந்த பாலீஷ்ட் அரசியலை மக்கள் விரும்பவில்லை. என்னதான் ஜெயலலிதாவின் சர்வாதிகார அகம்பாவ அரசியலை விமர்சித்தாலும் உறுதியான முடிவுகளையும் தடாலடியான செயல்பாடுகளையும் மக்கள் உள்ளூர ரசிக்கவே செய்கிறார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது.
காங்கிரசும் திமுகவும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால்,ஊழல்வாதிகள், கல்விக்கொள்ளையர்கள், குடும்ப அரசியல் மற்றும் சமாளிப்பு அரசியலில் இருந்து வெளியாகி முழுதும் மக்கள் நலன் சார்ந்த உறுதியான செயல்பாடுகளை முன்னிருத்தவும் பணம் செலவழிப்பவர்கட்கு சீட்டுக் கொடுப்பதை விட்டொழித்து மக்களுடன் மக்களாக களப்பணியாற்றும் நல்லவர்களை முன்னிருத்தவும் வேண்டும்.
இனியும் சொல்விளையாட்டுகள் மூலமும் சப்பைக்கட்டுகள் மூலமும் மக்களைக் கவரவியலாது என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்..!!
#மோடியை ஊதிப்பெரிதாக்கிய ஊடகங்களின் முயற்சி வெற்றி பெறத்தான் செய்திருக்கிறது.ஆனால் இது இந்துத்வாவின் வெற்றி அல்ல. முன்னேற்றத்துக்கு ஏங்கிய அப்பாவி மக்களின் இறுதி முயற்சி.
இந்த அரசு உருப்படியான மக்கள் நலன் பேணும் ஆட்சியை முன்னெடுக்காவிடில் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள் என்பதில் துளீயும் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment