Tuesday, May 6, 2014

தீனைப் பெறுதல் நெறியைப் பெறுதல்


*தீனைப் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்

தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தீனை விட்டோர் தானும் கெட்டார்
தீனில் தேடல் வாழ்வின் வழி தேடல்
தீனில் இல்லாததை புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்

தீனில் ஆய்வு கொள் அறிவு பெற்று இறைவனைத் தேடு
தீனில் வீண் விவாதம் செய்து தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்காதே
தீனில் வாதம் செய்து போட்டி போட்டு பெருமை கொள்ளாதே
தீனின் வாழ்வில் போட்டி இல்லை பொறாமை இல்லை
தீனில் உயர்ந்தோரில்லை தாழ்ந்தோரில்லை
தீனின் வாழ்வில் நிம்மதி உண்டு, நிறைவு உண்டு, மகிழ்வு உண்டு

*தீன் எனும் அரபுச் சொல்லின் பொருள் இஸ்லாமிய நெறியாகும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails