புதுவை: புதுச்சேரியில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் மீனவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் வி.வைத்திலிங்கம், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மீனவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக் கூட்டம், சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்தின் முடிவு குறித்து முதல்வர் வி.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியபோது: மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, மீனவர்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.http://www.inneram.com/2010082010168/2-reservation-for-muslims-in-puducherry
No comments:
Post a Comment