Saturday, August 7, 2010

ஐரோப்பாவில் அதிகரிக்கும் முஸ்லிம் மக்கள் தொகை!

சசி
ஐரோப்பாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிகரித்து வருவதாக அமெரிக்க ஆராய்ச்சி கழகம் ஒன்று அறிவித்துள்ளது. தற்போது அங்கு 4% சதவீதமே முஸ்லிம்கள் இருப்பதாகவும், இது 2050ஆம் ஆண்டில் 20% சதவீதமாக அதிகரிக்கும் எனவும் இது மற்ற சமுதாய வளர்ச்சியை விட அதிகம் என்றும் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் முஸ்லிம்களின் தொகை தற்போது 23%  சதவீதம் இருக்கிறது. ஆனால் இது 2050ம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மட்டும் இதற்கு நிகராக வர வாய்ப்பிருக்கிறது. பிறப்பாலும், குடியேற்றத்தாலும் இந்த அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1998ஆம் ஆண்டு ஸ்பெயினில் மட்டும் 3.2 இருந்த முஸ்லிம் தொகை 2007ல் 13.4% சதவீதமாக அதிகரித்துள்ளது. 30வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் இருந்த முஸ்லிம் மக்கள் தொகை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் 2015ஆம் ஆண்டு வாக்கில் இது இரண்டு மடங்காக ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ருசெல்ஸ் நகரத்தில் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் முதல் ஏழு இடத்தை முகமது, ஆதம், ரியான், அயூப், மெஹ்தி, அமீன் மற்றும் ஹம்சாவாக இருப்பதாக டெலிகிராப் பத்திரிகை தெரிவித்தள்ளது.
அயர்லாத்தில் தற்போது முஸ்லீம்கள் முன்றாவது இடத்தில் இருப்பது விரைவில் இராண்டாம் இடத்திற்கு வரும் வகையில் முஸ்லிம் மக்கள் தொகை வளர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails