ஜெருசலத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதியை சுற்றி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குழு மறைமுகமாக பூமியின் கீழ் பாதாளம் அமைத்து மசூதியை ஆக்கிரமிப்பு செய்யும் சதித்திட்டம் தீட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்-அக்ஸாவின் பாரம்பரியம் மற்றும் நிதி அமைப்பு இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் யுதர்களுக்கு சொந்தமான பகுதியில் இருந்து மசூதிக்கு கீழ் செல்லும் வகையில் இஸ்ரேல் பாதாளம் அமைத்து சதி திட்டம் தீட்டி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர்களின் இந்த அறிவிப்பை இஸ்ரேலின் அதிகாரத்துவ பத்திரிக்கையான மாரிவ் கடந்த திங்கள் அன்று முதல் பக்கத்தில் முக்கிய செய்தியாக வெளியிட்டுருப்பத்தின் மூலம் இது இஸ்ரேல் அமைச்சகமே தீட்டியுள்ள சதிச்செயல் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
இந்த பாதாளம் மூலம் மசூதியின் அடித்தளத்தை பலகீனபடுத்தி இடிக்க வைக்கும் செயல் மட்டுமல்லாது மசூதியின் முக்கிய புனித இடமான அல் ஹரம் அல் ஷெரிபை பிற்காலத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் இலகுவாக நுழைந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கும் வசதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியை கைப்பற்றி கொள்ளவே இவ்வாறான பாதாளங்களை இஸ்ரேல் அமைச்சகம் அமைத்து வருதாகவே இந்த அமைப்பு இஸ்ரேல் அமைப்பின் சதித்திட்டம் பற்றி குற்றம் சாட்டியுள்ளது.
http://www.inneram.com/2010081810135/occupying-al-aksa-masjid-israels-secret-plan-disclosed
No comments:
Post a Comment