Monday, August 16, 2010

"BLACKBERRYயா?" இல்லை "கருப்பு எலியா?"

"BLACKBERRYயா?" இல்லை "கருப்பு எலியா?"

சொந்த ஊர்ல மூக்குப்பொடிக்கு வக்கில்லாதவர் கிட்டயெல்லாம் இந்த “கருப்பு எலி” இருந்துக்கிட்டு                       என்னா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறது.    
நல்ல பயனுல்ல இந்த அறிவியல் கண்டுபிடிப்பு சாதனம், வியாபாரம் வணிகத்துறையில் உள்ளவர்களுக்கு உதவியாகவும், பிரயோஜனமாகவும் இருப்பது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளில் இந்த “கருப்பு எலி” சம்பந்தமாக இந்தியா, அமீரகம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த “கருப்பு எலி”யின் மேல் நம் மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு. இந்த “கருப்பு எலி”யின் வரலாறு பற்றிய செய்திகளை கீழே தரப்பட்டுள்ள ஆங்கில விளக்கத்தை பாருங்கள்.

Blackberry Trivia

The first BlackBerry, the 850, launched in 1998, used two AA size batteries.

It took until 2004 for BB makers Research in Motion to reach two million subscribers.

RIM did not add a camera to a BlackBerry smartphone until 2007; BlackBerry Curve was the first one.

In January 2010, RIM shipped its 50 millionth BlackBerry smartphone.

BlackBerry smartphones are sold in over 150 countries from over 425 carriers and national distribution partners.

RIM continues to grow even during the economic decline. RIM hired more than 4,000 employees last year. In January this year RIM had over 12,000 employees.

ஒருவன் பிறந்தது முதல் மண்ணைறைக்கு செல்லும்வரை இந்த “கருப்பு எலி” உதவியாக இருக்குமாம், என்னா காமெடி அடிக்கிறாங்க. ஈமெயில், சாட்டிங் பேன்ற வசதிகள் கொண்ட இந்த “கருப்பு எலி”யால் நன்மையா தீமை என்று அளசும் போது, மக்கள் இதை பயன்படுத்தும் விதத்தில் தான் இதன் நன்மை தீமைகள் வித்யாசப்படுகிறது.

காலையில் விழித்தது முதல் இரவு படுக்கைவரை இந்த “கருப்பு எலி” சிலரின் நிம்மதிக்கும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் நிம்மதிக்கும் அப்பு வைக்கிறது என்பது நடைமுறையான உண்மை என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொண்டுதான் ஆகாவேண்டும்.

ரோட்டில் சிக்னலில் இருக்கும் போதும், வாகனங்களில் சொல்லும் போதும், பேருந்துகளில் இருக்கும் போது,  வழிபாட்டுதலங்களிலும், இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம். அப்பாப்பா இந்த இரண்டு கட்ட வேரலால் இந்த “கருப்பு எலி”யை வச்சுகிட்டு என்னாமா பந்தாவிடுராங்க. இதை ஒருவிதமான நோய் என்று சொன்னால் மிகையில்லை.

இந்த “கருப்பு எலி”யால் கட்டவிரலுக்கு என்று புதிய நோய் உருவாகியுள்ளதாம்.

எல்லாத்தைவிட கொடுமை, நாம் நல்லா அழகா வரி வரியா ஒரு மடல் எழுதியிருப்போம் ஒருவருக்கு, அவரிடமிருந்து வரும் இரண்டுவரியில் கேவலமான ALIGNMENTல வரும் பாருங்க பதில், வேறுத்து போவியிடுவோம். காரணம் அவர் “கருப்பு எலி”யிலிருந்து பந்தாவா பதில் போட்டிருப்பாரு.

எத்தனையோ குடும்பங்களில் கணவன், மனைவி இடையே இந்த "கருப்பு எலி"யால் நிறைய பிரச்சினைகள் வருவதாக புதிதாக எடுக்கப்பட்ட சர்வே தெரிவிக்கிறது.

அமீரகத்தில் அடிக்கடி காதில் முனுமுனுத்துகிட்டு இருக்கும் கேள்வி இது தான் “கருப்பு எலி”க்கு கண்டிப்பா தடை வருமாaaaaaa? வராதாaaaaaa? என்னிடம் இப்படி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில் இதோ “உலக மகா பாப்புலர் ஜோசியர் ஒருத்தர் இருக்காரு” அவர்கிட்ட போய் கேளுங்க, அவர் யாரு? “அட நம்ம ஆக்டோபஸ்தாங்க”.

அது சரி  "கருப்பு எலி" என்று கட்டுரையில் ஏன் உள்ளது என்று யாராச்சும் சொல்லுங்களேன்.

எத்தனையோ சகோதரர்கள் இந்த நவீன கண்டுபிடிப்பை (BLACKBERRY)  நல்ல பயனுள்ளவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள், அவர்கள் அனைவரையும் சாடுவது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. இக்கட்டுரை “BLACKBERRY”யை பந்தாவுக்காக நல்ல விசயங்களுக்காக பயன்படுத்த தவறியவர்களை சும்மா நக்கலடிப்பதற்காக மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள சுட்டியை படித்துப்பாருங்கள் என்ன கொடுமையேல்லாம் இதை வச்சு நடக்குது என்று.


http://gulfnews.com/business/telecoms/the-great-divide-blackberry-blues-1.667175


நன்றி:  Gulf News

 http://adirainirubar.blogspot.com/2010/08/blackberry.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails