Sunday, August 22, 2010

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

இழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.

வருடத்தில் பதினொன்று மாதங்கள் மனிதன் தன் உடலின் தேவைக்கேற்ப திட, திரவப்பொருட்களை உணவாக தேவையான                         நேரத்தில் பொருளாதார வசதிக்கேற்ப‌ உட்கொள்கின்றான். உயிரை வளர்ப்பதாக கூறி தன் வயிற்றை வளர்ப்பவர்களும் அதில் உண்டு. இஸ்லாம் அரபு மாதங்களில் ஒன்பதாவது மாதத்தை புனித ரமளானாக்கி அதை மனிதர்கள் காலை முதல் மாலை வரை உணவு, நீரின்றி பசித்திருந்து உணவு, குடிநீரின்றி அன்றாடம் வாடும் எத்தனையோ வரியவர்களின் சொல்லாத்துயரங்களையும், வேதனைகளையும் உள்ளவர்களும் உணரச்செய்ய வேண்டி ஒரு மாத காலம் இறைவன் இந்த சிறந்த ஏற்பாட்டை முந்தைய சமுதாயங்கள் போல் கடைசி மனித சமூகம் வரை வர இருக்கும் அனைவருக்கும் கட்டாயக்கடமையாக‌ ஏற்படுத்தித்தந்துள்ளான்.

மற்ற பிற மாதங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பை இம்மாதத்திற்கு வழங்கி உள்ளான். மாமறை திருக்குர்'ஆன் இறக்கப்பட்டது முதல் மனிதன் மனிதனாக வாழ தேவையான எல்லா வாழ்க்கைப்பாடத்தையும் எம்பெருமானார் நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறான்.

அல்ஹம்துலில்லாஹ் நாமும் அந்த புனித மாதத்தில் பயணித்து வருகின்றோம். மார்க்கம் முறையே போதித்தது போல் நாமும் அதிகமதிகம் நற்கருமங்களையும், நல்ல பல அமல்களையும் செய்து ஈருலக பாக்கியங்கள் எல்லாவற்றையும் நம்மை படைத்தவனிடமே சன்மானமாக பெற்றிடுவோம் இன்ஷா அல்லாஹ்...

நோன்பு திறக்கும் சமயம் நாம் காலையிலிருந்து மாலை வரை பசித்திருந்து, தாகித்திருந்து வரும் உடல் மற்றும் மனச்சோர்வை போக்க உடலுக்கு (தற்காலிக) உடனடி சக்தி தருவதாக சொல்லப்படும் பல செயற்கையான‌ வேதியியல் பொருட்களால் உருவாக்கப்படும் குளிர்பானங்கள் (பைசன், ரெட் புல், பவர் ஹார்ஸ் போன்ற) உடலுக்கு பல பக்க விளைவுகளை குறிப்பாக நுரையீரல், சிறுநீரக கோளாறுகளையும் இன்ன பிற உடல் உபாதைகளையும் தருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறார்கள். ( அரபு நியூஸின் ஆங்கிலக்கட்டுரை) (நம்மூரில் பெரும்பாலான வீடுகளில் இஞ்சை தட்டிப்போட்டு காய்ச்சப்படும் தேத்தண்ணி தரும் உடனடி சுறுசுறுப்பையும், விறுவிறுப்பையும் அவர்கள் அறியமாட்டார்கள் போலும்).

நோன்பு திறக்கும் சமயம் நம்மில் பெரும்பாலானோர் (ஆக்கப்பொறுத்தவன் ஆரப்பொறுக்க வில்லை) என்று பெரியவர்கள் சொல்வது போல் காலையிலிருந்து பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் பல நல்ல அமல்கள் செய்து விட்டு நோன்பு திறக்கும் சமயம் பல விசயங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். எளிதில் கோபம் வந்து விடுகிறது. நோன்பு திறக்கும் சமயம் வாகன ஓட்டிகளுக்கு கோபம் இன்னும் அதிகமாக வருகிறது. அதனால் பல விபத்துக்கள் அரபு நாடுகளில் அன்றாடம் நடந்து வருவதாக‌ சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது.

நம் மார்க்கம் இஸ்லாம் எக்காலத்திற்கும் அறிவியலோடு ஒத்துப்போகக்கூடிய மற்றும் அறிவியலே வியந்து தன் மூக்கில் கைவைக்கும் அளவுக்கு பல பொக்கிஷத்தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இஸ்லாத்திற்கு விரோதமான சக்திகள் சொல்வது போல் இஸ்லாம் ஒரு கண்மூடித்தனமான, காட்டுமிராண்டியான மார்க்கமாக இருந்திருந்தால் தன் கட்டாயக்கடமையான புனித ரமளான் நோன்பை பச்சிளம் குழந்தை முதல், சிறுவர், சிறுமியர், தீராத நோயுடையோர், மாதவிடாய் பெண்கள், புத்தி சுவாதீனமானவர்கள், தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் என எல்லோரையும் கட்டாயம் பிடிக்க கட்டளையிட்டிருக்குமல்லவா? நிச்சயமாக இஸ்லாம் மனிதன் தன் சக்திக்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய ஒரு போதும் ஏவியதில்லை..

சிந்திப்போமாக....

ந‌ம் எல்லோரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக, நம் எல்லா நல்லமல்களையும் ஏற்றுக்கொள்வானாக....ஆமீன்....

--மு.செ.மு. நெய்னா முஹம்மது.
Source : http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_22.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails