பாக்தாத்: ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி பிரிவும் இன்று வெளியேறி சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது.
இந்நிலையில்,சதாம் உசேனும் மற்றும் அவரின் ஆதவாளார்கள் தூக்கிலிடப்பட்டார்கள். நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிலிருந்து முற்றிலும் வெளியேறிவிடுவர் என்றும், பாதுகாப்பு பணிகளில் ஈராக் இராணுவத்தினரே ஈடுபடுவர்கள் என்றும் அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.
அதே சமயம் தார்மீக மனபலத்திற்காக 50,000 வீரர்கள் மட்டும் ஒரு ஆண்டு காலத்திற்கு, ஈராக்கையொட்டிய குவைத் எல்லைப் பகுதியில் முகாமிட்டிருப்பாகள் என்றும், தேவைபடும்பட்சத்தில் ஈராக் இராணுவமே அழைத்தால் மட்டுமே,இவர்கள் ஈராக் சென்று உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரின் கடைசி படையணியும் இன்று வெளியேறி, குவைத் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.inneram.com/2010081910164/the-last-american-army-come-out-from-iraq
No comments:
Post a Comment