Thursday, August 19, 2010

துபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 86.000 மோசடி!

திருப்பூர் :வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர் ஒருவரிடம் பாஸ்போர்ட் மற்றும் ரூ.86 ஆயிரம் ஆகியவற்றை வாங்கி  மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நடுப்பாளையத்தை சேர்ந்த நல்லசிவம் மகன் சுரேஷ்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். வெளிநாட்டில் வேலைபார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இவரை, திருப்பூரை சேர்ந்த ராஜா, வெங்கடேஷ், சரவணன், கார்த்திகேயன் ஆகியோர் அணுகியுள்ளனர்.
துபாய், அபுதாபியில் காஸ் கம்பெனியில் வேலைவாங்கித்தருவதாக கூறியுள்ளனர். இவர்களை நம்பிய சுரேஷ்குமார், கடந்த மே மாதம் ரூ.86ஆயிரம் பணத்தையும், தனது பாஸ்போர்ட்டையும் வழங்கியதாக தெரிகிறது. ஆனால், பணத்தையும், பாஸ்போர்ட்டையும் பெற்றுக்கொண்ட இவர்கள் 4 பேரும் தலைமறைவாயினர்.
சுரேஷ்குமார் புகாரின்பேரில், திருப்பூர் மத்திய போலீசார் 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்
Source : http://www.inneram.com/2010081910155/rs-86000-cheeted-by-overseas-employment-agent
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails