
'டெய்லி மாரிவ்' (Daily Mariv) என்ற யூத பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் யூத குருமார்கள் தங்கள் மத பெண்களை 'ஹிஜாப்' அணிய அறிவுறுத்தி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் சுவரொட்டி கொண்டு விளம்பரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதில் பெண்கள் தலை முதல் பாதம் வரை முழுவதும் மறைத்து உடை அணியவும், தலைமுடியினை மறைத்துக்கொள்ளவும், ஒளி ஊடுருவுகிற (Transparent) ஆடைகள் மற்றும் இறுக்கமாக உடல் அங்கங்கள் தெரியும் உடைகள் அணிய கட்டுபாடுகள் விதித்தும், கறுப்பு நிற மேலங்கி உபயோகப்படுத்த வலியுறுத்தியும் விளம்பரம் செய்துள்ளனர். இவை பெண்களைப் பாவங்களில் இருந்து விடுபட செய்யும் செயல்கள் எனவும், மீறுவது யூத மத வேதம் டோராவிற்கு எதிரானது என்றும் அவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த மதகுருமார்கள் குட்டை பாவடை, நீச்சல் உடை மற்றும் வண்ணமயமான அலங்கார உடைகளை பெண்கள் உடுத்துவதற்கும் கட்டுபாட்டு ஆணைகள் இட்டு வருகின்றனர். டோரா வேத குருமார்கள் மத சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் மிகவும் கண்டிப்பானவர்கள். மற்றொரு பிரிவான ஹரேடிம் ஏற்கனவே இவற்றைப் பின்பற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பெண்கள் போது இடங்களில் செல்போன் உபயோகிப்பதற்கும் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த விளம்பரங்கள் தெரிவிப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுயுள்ளது.
இது அங்கு உள்ள மற்ற யூத மத பிரிவுகள் இடையே கருத்து வேற்றுமையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அந்தச் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
Source : http://www.inneram.com/201008059810/jews-cleriks-advised-israeli-women-to-wear-hijab
No comments:
Post a Comment