Saturday, August 14, 2010

முஸ்லிம்களுக்கும் மற்றவர்களைப் போன்றே உரிமை உண்டு - ஒபாமா

பாபுஜி 
"தம்முடைய மதத்தைப் பின்பற்றுவதில் மற்றவர்களுக்கு இருக்கும் அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு" என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
நியூயார்க்கில், இடிக்கப்பட்ட இரட்டை கோபுரங்களுக்கு அருகில் உள்ள பகுதியொன்றில்,புதிய மசூதி ஒன்றும் (முஸ்லிம்) சமூகக்கூடம் ஒன்றும் கட்டப்படுவதற்கும் அவர் ஒப்புமை அளித்துள்ளார்.

வெள்ளை மாளிகை ஏற்பாட்டில் புனித ரமளான் மாத நோன்பு துறப்பு நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், இக்கருத்தை அவர் வெளியிட்டார்.

பல்வேறு அரபு, இஸ்லாமிய நாடுகளின் தூதர்களும், உயர் அலுவலர்களும், இரண்டு அமெரிக்க முஸ்லிம் எம்.பிக்களுமாக, 100க்கும் அதிகமானோர் இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

"தம்முடைய மதத்தைப் பின்பற்றுவதில் இருக்கும் உரிமையில் புதிய வழிபாட்டுத்தலங்களை நிறுவுவதும், சமூகநலக்கூடங்களை அமைத்துக்கொள்வதும் அடங்கும்" என்றும் ஒபாமா குறிப்பிட்டார் "உள்ளூர் சட்டதிட்டங்களுக்கேற்ப அவை செயற்பட வேண்டும்".

இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் மசூதி அமையவிருப்பது குறித்து நியூயார்க் நகரில் விவாதங்கள் அனலடிக்கும் வேளையில் அதிபரின் இந்தப் பேச்சு சுட்டத்தக்கதாக அமைந்துள்ளது.

நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் அமைய உள்ள மசூதி பற்றிய அதிபரின் இந்த முதற்பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதப் பிரதிவாதங்கள் கிளம்பியுள்ளன.

முன்னதாக, "இது முழுக்க முழுக்க உள்ளூர் நிலைபாட்டைப் பொருத்தது" என்று வெள்ளை மாளிகை கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/2010081410040/rights-for-muslims-are-equal-obama

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails