Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Thursday, September 9, 2010

இனிய ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்


 எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல 

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள் 

காட்டிச் சென்ற ஈகைப் பெருநாளில்  வேண்டுவோம்அனைத்துப் புகழும் 

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் 

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.




                                     அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)

Monday, August 30, 2010

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி

நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப்போட்டி





புனித ரமலானை முன்னிட்டு "நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை" சங்கமானது அறிவுபோட்டியை ஆரம்பித்துள்ளது. நமதூர் மக்களும் இன்ன இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் தம்முடைய இஸ்லாமிய அறிவாற்றலை மென்மேலும் வளத்துக்கொள்ள வேண்டி இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் விதிமுறைகள், கேள்விகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. விடை அறிந்தவர்கள் தமது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவித்து அவர்கள் வெற்றிபெற உதவலாம். மேலும் இச்செய்தியை தமது நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும். முதல் முயறிசியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போட்டி வெற்றி பெறவும், இதுபோன்ற இன்னும் சிறப்பான அறிவுச்சார்ந்த போட்டிகள் எதிர்காலத்திலும் நடத்துவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்யவும். 







விதிமுறைகளையும், கேள்விகளையும் டவுன்லோட் செய்ய.......




Tuesday, August 10, 2010

சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப் போட்டி!

அறிவிப்புகள் - நிர்வாக அறிவிப்பு
புதன், 11 ஆகஸ்டு 2010 02:02
ளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
"படிப்பீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் படிப்பீராக!" - ஓதுதலையும் அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதையும் அடிப்படையாக வைத்து அருளப்பட்ட இறைமார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் சமுதாயம் ஏனோ சண்டை, சச்சரவு, அநாவசிய வாக்குவாதம், பிளவு, வேற்றுமை பாராட்டல் போன்ற ஷைத்தானிய குணங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

இச்சமுதாயத்தில் ஊடுருவியுள்ள - இஸ்லாம் அறவே தடை செய்துள்ள, இத்தகைய தீய குணங்களெல்லாம் மறைந்து உன்னத சமுதாயமாக மாற வேண்டுமெனில், இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும், அறிவுப் புரட்சியை நோக்கி கவனத்தைத் திசை திருப்புவதும் அவசியமாகிறது.

கற்றலும் கற்பித்தலும் மேலோங்கவும், அறிவைப் பெருக்கிக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் ஹிஜ்ரி 1431 ஆண்டு (2010) ரமளான் மாதம் (2010)  முதல் தேதியிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.

கல்வி கற்றலின் முக்கியத்துவத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் அவசியத்தையும் இச்சமுதாயத்தில் பரவலாக்கிடுவதற்கு இந்த அறிவுப்போட்டி உதவும் என சத்தியமார்க்கம்.காம் நம்புகிறது. அதுவே இப்போட்டியின் நோக்கமாகும்.

வல்ல இறைவன் அதற்கு உறுதுணையும் அருளும் புரிவானாக!

இஸ்லாமிய அறிவுப்போட்டி-1



போட்டியின் நிபந்தனைகள்:

1. மார்க்கம் மற்றும் உலக விஷயங்களிலிருந்து பிரதி வாரம் 10 கேள்விகள் இடம்பெறும். போட்டியாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளிலிருந்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.

1அ. போட்டியாளர்கள் தங்களின் சரியான மின் அஞ்சல் முகவரியைத் தந்து போட்டியில் கலந்து கொள்ளவும். வெற்றி பெற்ற அறிவிப்பும், பரிசுக்கான விபரத்திற்காகவும் இந்த மின் அஞ்சல் முகவரியை சத்தியமார்க்கம்.காம் தொடர்பு கொள்ளும்.

2. போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம் ஒவ்வொரு வாரமும் தளத்தில் வெளியாகும்.

3. போட்டியில் வெல்வோருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவான முறையில் எடுத்துரைக்கும் "ரஹீக்" நூல் பரிசாக வழங்கப்படும்.

4. ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான விடையளித்திருப்பின், அவர்களில் மிகக் குறைந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுவார். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருப்பின் அவர்களில் முதன் முதலாக சரியாக விடையளித்தவர் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். அதிலும் போட்டி ஏற்படின் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். சத்தியமார்க்கம்.காம் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது.

5. வெற்றி பெற்றவருக்குரியப் பரிசு இந்திய அல்லது இலங்கை முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். மற்ற நாடுகளுக்கு அனுப்ப இயலாது.

6. பரிசு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் பரிசுக்குரியவர் தமது முகவரியைத் தெரிவித்துப் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. வெற்றிபெற்றவர்கள், போட்டியின் போது உள்ளீடு செய்த மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளப்படுவர். அதனைத் தொடர்ந்து பரிசு அனுப்பி வைக்கப்பட வேண்டிய இந்திய அல்லது இலங்கை முகவரியை quiz@satyamargam.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான தொழில் நுட்ப சந்தேகங்கள் ஏதும் இருப்பின் இதே மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

8. சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் எவரும் இப்போட்டியில் பங்கு பெற அனுமதி இல்லை.

சகோதரர்கள் அனைவருக்கும் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்.

- சத்தியமார்க்கம்.காம்

Wednesday, July 21, 2010

தீர்வை நோக்கி…! (இஸ்லாம் கூறும் பிறைக் கணக்கு) – நிகழ்ச்சி அழைப்பிதழ்

எழுதியவர்/பதிந்தவர்/உரை P. முகமது சிராஜுதீன்
அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

LinkWithin

Related Posts with Thumbnails