Saturday, April 26, 2014

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில்  வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25  துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி சமுதாயம் கல்வியில் முன்னேற முக்கியக் காரணமாக இருந்து வருபவர். இதன் காரணமாக கல்வி வள்ளல் என அழைக்கப்படுகிறார். தமிழகத்திலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல் நிர்மாணத்திற்கும், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் பல்வேறு உதவிகளை செய்து வருபவர்.

துபை ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் 75,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மேம்பாட்டுக்கு காரணமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

for further details Please visit www.globalleadershipawards.com

 http://mudukulathur.com/?p=25609

                                                             from:Muduvai Hidayath

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails