Thursday, April 3, 2014

தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்)

  ஸ்பெயின் நாட்டை ஆண்ட விசிகோத் மன்னர் ரொடெரிக் கொடுங்கோலராக இருந்தார். இவரால் அடக்கி ஒடுக்கப்பட்ட செர்புகளும், யூதர்களும் உமய்யா கிலாபத்தின்   வடஆப்பிரிக்க ஆளுநரானமூசா இப்னு  நுசைரின்உதவியை நாடினர். வீரமிக்க தளபதியான தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) அவர்கள் தலைமையில் சென்ற   12,௦௦௦இஸ்லாமிய ராணுவ வீரர்களை மன்னர் ரோடிரிகின் 90,௦௦௦கிறிஸ்தவ படையினர் எதிர்கொண்டனர். தாங்கள் பயணித்தகப்பல்கள் அனைத்தயும்தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) அவர்கள்எரித்துவிட்டு ராணுவ வீரர்கள் மத்தியில்எழுச்சிமிக்க உரையை ஆற்றினார். தங்கள் முன்பு  மாபெரும் எதிரிகளின் அணிவகுப்பு, பின்புறம் திரும்பி செல்ல முடியாமல்கடல் என்ற இக்கட்டான சூழலைக்கண்டுபதறிய ராணுவ வீரர்களை, வெற்றி அல்லது வீரமரணம் என்ற நற்செய்தியைக்கொண்டு தாரிக் இப்னு ஜியாத் (ரஹ்) உற்சாகப்படுத்தினார்.ஹிஜ்ரி 92 ரமலான் மாதத்தில்நடைபெற்ற இந்த போரில்முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியை பெற்றனர்.ஸ்பெயின், சிசிலி மற்றும் ஃபிரான்சின் ஒரு பகுதியைஇஸ்லாமிய அரசுடன் இணைத்தனர். இது அப்பகுதிகளின் (அல்-அந்தலுஸ்) பொற்காலத்தின் தொடக்கமாயிற்று. இங்கு முஸ்லிம்கள் 700 ஆண்டுகட்கும் மேலாக ஆண்டனர்.

         ஹிஜ்ரி 582ம் ஆண்டு ரமலான் மாதத்தில் சலாஹூதீன் அய்யூபி(ரஹ்) அவர்கள் கிலாஃபத்தின்முஜாஹிதீன்களுடன் இணைந்து சிலுவைப்படையினரை ஒரே நாளில்சிரியாவினின்றும் விரட்டியடித்து ஆக்கிரமிப்பிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் மீட்டார்.

        ஹிஜிரி ஏழாம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் ஆசியாவில்தமது ஆதிக்கத்தை பரவச்செயதனர். செங்கிஸ்கான் தன்னை மனிதகுலத்தின் பாவத்திற்காக தண்டிக்கும் கடவுளின் சாட்டை எனக் கருதினான்.ஹிஜிரி 617-ல் சமர்க்கண்ட்,ரேஹமதான் போன்ற பகுதிகள் அவனின் வாள் வீச்சிற்கு ஆட்பட்டு 7,00,000 ற்கும்மேற்பட்டோர்கொல்லப்பட்டனர்.ஹிஜிரி 656 ல் செங்கிஸ்கானின் பேரனான ஹூலாகு மூலம் அப்பேரழிவு தொடர்ந்தது இஸ்லாமிய அரசின் தலைநகரான பாக்தாதும் இதிலிருந்து தப்பவில்லை. இப்படையெடுப்பில் 1,800,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சொல்லொண்ணாதுயரத்திற்குஆட்படுத்தப்பட்டனர். மஸ்ஜித்களில்மதுபானம் தெளிக்கப்பட்டது. தொழுகைக்கு அதான்(பாங்கு) சொல்வதும் தடைசெய்யப்பட்டது. இத்தகைய கொடுமைகட்கு மத்தியில் இஸ்லாமிய பகுதிகள் அனைத்துமே அதே நிலைக்கு ஆளாகிவிடலாம் என்ற நிலையில் ஸைபுதீன் குத்ஸ்(ரஹ்) அவர்கள் முஸ்லிம் படையை ஒருங்கிணைத்து ஐன் ஜாலுத் எனுமிடத்தில்ஹிஜ்ரி 658 ஆம்ஆண்டுரமலான் மாதத்தில்மங்கோலியப் படையை அடியோடு வீழ்த்தினார். அல்லாஹ்سبحانه وتعالىவின்உதவியால் கிட்டிய இவ்வெற்றியினால் முழு உலகும் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.

இத்தகைய மாபெரும் நிகழ்வுகள்  முஸ்லிம்களுக்கு  மாபெரும் உத்வேகத்தை அளிக்கவேண்டும். நம்முடைய முன்னோர்களான சத்திய சீலர்கள் பெற்ற எழுச்சியையும் வெற்றியையும் நாம் நினைவில் நிறுத்துவோம். ரமலான் மாதத்தின்புத்துணர்ச்சிகாரணமாக நமது முன்னோர்கள் தங்கள் முன்சவாலாகத் தோன்றிய அனைத்துசெயல்களையும் சிறப்பாகசெய்து முடித்தனர். பகல் நேரத்தை போர்க்களத்திலும், இரவு நேரத்தை இபாதத்திலும் கழித்தனர். வெறுமனே துஆவுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயல்களிலும் சாதித்தனர்.

                            இன்றைய காலகட்டத்தில்  இஸ்லாமிய உலகு நவீன காலனியாதிக்கவாதிகளின்ஆக்கிரமிப்புகளாலும், தாக்குதல்களாலும், பரவலான ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியாலும்  வியாபிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கட்கு எதிரான பல்முனை தாக்குதல்கள்முழு வீச்சில் நடைபெற்று வருகிறது… அல்லாஹ்வின் நல்லடியார்களேரமாலானின் புத்தணர்ச்சி நம்மைஎழுச்சிபெற செய்யட்டும்…

Source : http://sindhanai.org/?p=373

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails