படித்துத்தான் பாருங்களேன் !
அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட்டின் (WARREN BUFFET) ஒரு நாள் வருமானம் 222 கோடி ரூபாய். கழிந்த ஆண்டில் அதிக வருமானம் ஈட்டியவரும் அவர்தான்.
அவரைப்பற்றி துபாய் தோஷிபா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் எம்.ஜே.எம் . முஹம்மது இக்பால் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி...
" சமீபத்தில் vaarran buffet ன் நேர்காணலை டிவியில் பார்த்தேன். உயர்தரமான ஒளி பரப்பு அது.
இவர் 2006 ல் செய்த தர்மம் மட்டும் 31 பில்லியன் அமெரிக்க டாலர். எவ்வளவு இந்திய ரூபாய் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் ) இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுத்துவிட்டு தான் சந்தோசமாக இருப்பதாகக் கூறினார் இவர். அப்படிப்பட்ட மனம் இவருக்கு இருப்பதுதான் இவருக்குள்ள தனி சிறப்பு."
" எப்படி இவ்வளவு பெரிய தொகையை தானமாகக் கொடுக்க உங்களுக்கு மனம் வந்தது ? உங்கள் மனைவி இதற்கு ஒப்புக் கொண்டார்களா ?" என்று நிருபர்கள் கேட்டதற்கு ...
"" ஆம்... மிக்க மகிழ்வுடன் ஒப்புக் கொண்டார். செத்த பிணத்திற்கு போர்த்தும் ஆடையில் எந்த பாக்கெட்டும் இல்லை . போகும் போ எதைக் கொண்டுச் செல்லப் போகிறோம் ? என்று என் மனைவி சொன்னார் !" என்று கூறுகிறார் இந்த கோடீஸ்வரர்.
"my wife told me , the shroud has no pockets "
warran buffet தன்னைப் பற்றிச் சொன்ன சில தகவல்கள் சுவாரஸ்யமானவை...
@ அவர் 11 வயதில்தான் பங்கு சந்தையில் ஷேர் வாங்கினாராம். அதுவே மிகவும் தாமதமாம்.
வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போட்டு அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது 14 வது வயதில் ஒரு பண்ணை வீடு வாங்கினாராம்.
50 வருடங்களுக்கு முன்னாள் தன் திருமணத்தின் போது வாங்கிய பழைய வீட்டில்தான் இப்போதும் வசிக்கிறார். அந்த வீடோ போதுமான வசதிகள் இல்லாதது.
அவர் வைத்திருப்பது ஒரே ஒரு கார்தான். அதையும் அவரே ஓட்டுகிறார்.
உலகின் மிகப்பெரிய விமான கம்பெனி வைத்திருக்கும் வாரன் தனக்கென்று எந்த சொந்த விமானமும் வைத்துக் கொள்ளவில்லை.
நம்மைப்போல சாம்சங் S3 போன்ற மொபைல் எதுவும் அவர் உபயோகிப்பதில்லை.
இப்படி நிறைய ஆச்சரியங்களை வைத்துக் கொண்டு சாதாரணமாக இருக்கிறார் இந்த அசாதாரணமான மனிதர் .
இளைஞர்களுக்கு அவர் சொல்வது...
" உங்களை பண்படுத்துங்கள். அறிவை வளருங்கள். மற்றவருக்கு உதவியாக இருங்கள்."
இதை படிக்கும்போது நம் முஸ்லிம் மக்கள் கோடீஸ்வரர்கள் கண்மணி ரசூளுல்லாவின் போதனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். சதகா, ஜக்காத் போன்ற தர்மங்களை செய்வதை விட்டு ஆடம்பரமான திருமணங்கள் நடத்தி கோடிக்கணக்கில் செலவிட்டு பெருமை பேசுகிறார்கள்.
இனிமேலாவது சமுதாயம் சிந்திக்க வேண்டும் ! "
- நமது முற்றம் .. ஏப்ரல் 2007 இதழில் எழுதியது .
இக்பால் அவர்களின் சொந்த ஊர் வழுத்தூர்.
பொறியாளர் .. கடுமையான உழைப்பாளி. புதுமைகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வத் துடிப்போடு சிந்திப்பவர். ETA அஸ்கானில் ஜெனரல் மேனேஜராக இருந்தவர். அதன் பிறகு தோஷிபாவில் இணைந்து மேனேஜிங் டைரக்டராக இருக்கிறார். தினத்தந்தியில் " அறிவியல் அதிசயம் " என்ற தலைப்பில் விஞ்சான அதிசயங்களை தொடராக எழுதி அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறார். சிறந்த எழுத்தாளர். தமிழக ஆளுநரிடம் விருது வாங்கி இருப்பவர். பல ஆங்கில பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.
நாடு போற்றும் ஒரு மனிதர் நம் தமிழ் முஸ்லிம் சகோதரர் என்பதில் நமக்கெல்லாம் சந்தோசம்.
மீண்டும் ஒரு முறை அவருக்கு வாழ்த்துக் கூறுவதில் எனக்கும் சந்தோசம்.
Abu Haashima Vaver
No comments:
Post a Comment