தாய் தந்தயர்க்கு செய்ய வேண்டிய கடமைகளில் பல சமயம் நான் தவறி இருக்கலாம், அவை எல்லாம் தற்காலிகமே.. அவர்களின் மீதான மரியாதையும் அவர்களின் கண்ணியமாக பேசும் முறையும் நான் இஸ்லாமியனாக ஆனா பிறகுதான் எனக்கு தோன்றியது.. அவர்களுக்கு எந்த துரோகமும் செய்பவனாக எனக்கு தெரியவில்லை.
சாதிக்கு துரோகம்? சாதியால் பெருமை ஒன்றும் இல்லை, அப்படியே இருக்கும் என்றால் சூத்திரனாக வருணிக்கப்படும் இந்து மதத்தில் தாழ்ந்தவனாக குறிக்கப்படும் என் சாதியில் என்ன பெருமை இருக்க போகிறது. ஒரு வேலை உயர்ந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் சக மனிதனை தாழ்ந்தவனாக பார்க்கும் சாதியில் இருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும்?
முன்னோர்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டேன்? அவர்கள் செய்வதை அப்படியே செய்ய தவறினால் துரோகமா? என்றால் புதுமை மாற்றம் வளர்ச்சி என்பது இந்த சமுதாயத்தில் வந்து இருக்கவே முடியாது.. இன்று பேன்ட், சுடிதார் அணியும் ஒவ்வொருவரும், ஆங்கில மருந்து சிகிச்சை முறைகளை ஏற்று கொள்ளும் அனைவரும், இன்னும் அன்றாட வாழ்வில் உள்ள ஒவ்வொரு சின்னஞ் சிரிய மாற்றங்களை ஏற்று கொள்பவர்களும் முன்னோர்களுக்கு துரோகம் செய்பவர்கள்தான்.
இல்லை இல்லை இது வழிபாடு முறைகளுக்கு மட்டுமே பொருத்தம் என்று சொல்வீர்களானால், இயற்கையை வழிபட்ட தமிழர்கள், வட்டார கடவுள்களை வணங்கியவர்கள் எப்படி சைவ மதத்தை நமது முன்னோர்கள் ஏற்றுக்கொண்டார்கள் எப்படி வைணவத்தை ஏற்று கொண்டார்கள் பிறகு எப்படி அது அனைத்தையும் ஹிந்து என்ற ஒரே மதமாக அங்கீகரித்தார்கள்? என்றால் நமது முன்னோர்களும் வழி வழியாக முன் உள்ளவர்களுக்கு துரோகம் செய்து வந்து இருக்கிறார்கள் அல்லவா?
உண்மையில் இதனை துரோகம் என்று பார்ப்பது பொருத்தமல்ல, இதனை சீர்திருத்தம் என்று சொல்லுவதே பொருத்தமாகும். மதத்தை சீர்திருத்தம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்? தெரிந்து கொள்ள விரும்புபவர் புனித குரானை படிக்கட்டும்..
இஸ்லாமியர்களின் தவறுகளை விடுத்து இஸ்லாமை அதன் தூய வடிவில் அறிய முயற்சி செய்யும் ஒவ்வொருவரும் அவருக்கு அவரே நன்மையை செய்து கொள்கிறார்.. பெருமை கொண்டு இன்று கையில் உள்ள சிறிதளவு பணத்தை கண்டு மமதை கொண்டு இஸ்லாமை புறக்கணிப்பார்களே ஆனால் அது அவருக்கே கேடு..
இறைவன் நாம் அனைவரையும் இந்த தீய குணத்தில் இருந்து பாதுகாப்பனாக..
அஸ்ஸலாமு அழைக்கும்..
No comments:
Post a Comment