கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.