Monday, March 15, 2010

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ



பணமே உலகத்தின் ஒரே கடவுள்,அதற்காக எத்தனை குட்டிக்கரணங்களும் போடும் இவ்வுலகில் பாமரர்களுக்கு இந்த படித்த அறிவாளி எவ்விதத்திலும் சளைத்தவரில்லை என இவர் எச்சத்தால் அறிகிறோம். நேற்று முன்தினம் இந்து நேற்று பவுத்தம் இன்று முஸல்மான் இடையில் பெரியாரிஸ்ட் நாளை கிறித்துவர்?!?!?! ஆனாலும் ஆகலாம்.

அறிஞர்கள் என மக்களால் காட்டப்படுகிற சிலரில் இது போன்ற கோமாளிகளும் உண்டு என்பது தான் கசப்பான உண்மை. அதுசரி இவருடைய பயணத்திற்கும்,ம(த)ன மாற்றத்திற்கும் என்ன செலவு ஆனது??/
This Periyar thasan is one useless guy.
He is looking for monetary gain for converting to Islam and hence announced that in Riyadh.
It's good for Hinduism and loss to Islam.

என்றும் இன்னும் பலவாறும் பெரியார்தாசன் இஸ்லாத்தை தானாக தழுவி ஏற்றுக்கொண்ட பின் வர்ணிக்கின்றவர்களுக்கு பெரியார்தாசன் தரும் விடியோ பதில் இதோ.

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.
டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பேட்டி (Video)
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் தமுமுக இணையதளத்திற்காக அளித்த நேர்காணல்.
நன்றி : T.M.M.K
**********************

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர்,

பெரியார்தாசன் வெகு காலத்துக்கு முன்பே சங்கராச்சாரியார், ராமகோபாலன் ஆகியோருடன் வாதாடி, அவர்களை ஓட ஓட விரட்டியவர். இவரது கேள்வி எதற்கும் அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களைக் குறித்து கூறும்போது, இறையியல் தத்துவம், வணக்க வழிபாடுகள், மறுமை நம்பிக்கை என்கிற மூன்று அம்சங்களிலேயே மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்களே தவிர, இரத்தமும் சதையும் உள்ள சகதமிழர்களாக, அவர் தம் தொப்புள்கொடி உறவாகத்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கடத்தல்காரர்களாகவும், பலதார மணமுடிப்பவர்களாகவும் கருதும் போக்கு கடந்த சில வருடங்களாகத்தான் கட்டிஎழுப்பப்பட்டது என்ற பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் , பாபர்மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியே என்றார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்கள் உரிமைகளை சரியாகப் பெற முடியும் என்ற பேராசிரியர் அப்படி ஒன்றிணைந்து விடாமல் சுட்டா'ராம்' கட்சியும், செத்தா'ராம்' கட்சியும் சூழ்ச்சி வலை பின்னுவதை எளிதாக விளக்கினார். "நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழற மாதிரி அழு" கதை தான்.

செத்தவனும் ராம் ராம் என்று சொன்னான், சுட்டவனும் ராம் ராம் என்று தான் சொன்னான். ஆக, இந்த சூனாராம் சேனாராம்களே இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை 'நாம்' தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இங்கே, 'நாம்' என்பது ஒடுக்கப்பட்ட அனைவரும்.

" முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் ஆதிக்க வாதிகள். அப்படிப்பட்ட முஸ்லிம்களைத் தான் தம் இயக்கத்தில்; கட்சியில் பதவியில் வைத்து அழகு பார்ப்பார்கள்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்

"ஒரு ஊரில் மூன்று முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. நாலாவதாக வெளியிலிருந்து வந்தவன், இந்த மூன்று பேரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே இயக்கம் கண்டதாகச் சொல்கிறான்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன் 
நன்றி :

Sunday, March 14, 2010

நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!

எம்.ரிஷான் ஷெரீப்


















கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!

காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!

-எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை
 நன்றி:

Friday, March 12, 2010

செங்கிஸ்கான் (ஒரு வரலாறு)

[sen.jpg]வருடம் 1211. மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான், சீனாவின்
யான்ஜிங்க் (இன்றைய பீஜிங்) நகைரப் பிடிப்பதற்காக, தன் படையுடன் கிளம்பினார். ‘‘உடேன சரணைடயுங்கள். இல்லாவிட்டால் நிர்மூலம் செய்துவிடுவோம்’’ என்று, அரச தூதுவராக வந்த ஷாங்சூனை மிரட்டி அனுப்பினார். வழியெங்கும் சீனப் படைவீர‌ர்களின் பிணங்கள் சின்னாபின்னாமாகச் சிதைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தைதக் கண்டு மிரண்டுபோய், அரசரிடம் தகவலைச் சொன்னார் ஷாங்சூன். சீன அரசர்
கோபாவேசத்துடன் போருக்குக் கிளம்பினாலும், அவரது படைவீர‌ர்களிடம் செங்கிஸ்கானின் செயல்கள் பீதியை உருவாக்கியிருந்தன.
நாட்டுக்குள் நுழைந்த செங்கிஸ்கான் படையுடன் சீனப் படைகள் மோதினாலும், பயத்தின் பிடியில் இருந்த அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டம் கூட்டமாகப் படைவீர‌ர்கள் சரண்டையவே,
யான்ஜிங்க் நகர் வீழ்ந்தது. அரசர் விரட்டியடிக்கப்பட்டார். ‘இத்தனை எளிதான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என்று செங்கிஸ்கானிடம் படைத்தளபதி கேட்க, ‘‘தோல்வி அடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுபவன், வெற்றி பெற மாட்டான்’’ என்பது எனக்குத் தெரியும். இதுதான் என்னுடைய போர்த்தந்திரம். என் மீது இருக்கும் அச்சத்தை வைத்து, இந்த உலகம் முழுவைதயும்வெற்றி கொள்வேன்’’ என்றான்.
வருடம் 1162.

Wednesday, March 10, 2010

வெளிநாட்டு மோகம் எதுவரை?


 
[ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள், கட்டுரையின் இரண்டாம் பகுதி.]

சில வேளைகளில் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் பரிதாபரமாக அம்பலமாகும். துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பிய போது நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக துருக்கியில் குர்து மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்க மனப்பான்மையை மெச்சிய படியே, துருக்கியில் இருந்து குர்து அகதிகள் கப்பல் கப்பலாக இத்தாலி வந்திறங்கினர். இதைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக் கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. நேரே துருக்கி சென்று: "நான் சும்மா மனித உரிமை, அது இதென்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்து விட்டாயே!" என சமாதானப் படுத்திய பின்னர் தான், அகதிகளின் வருகை நின்றது.

பின்னர் ஒரு நேரம், கொசோவோ அல்பேனியர் மீது திடீர் பாசம் பொங்கி வரவே, அவர்களைப் பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது புதிய அகதிகள் படை தமது நாடுகளை நோக்கி வரலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்கு தேவையான அளவு அகதிகளை போய் கூட்டி வந்தன. கொண்டு வந்த அகதிகளை சிறப்பு முகாம்களில் சில காலம் (யுத்தம் முடியும் வரை) வைத்திருந்து விட்டு திருப்பியனுப்பினார்கள். ஐரோப்பிய அரசுகள், வருங்காலத்தில் "யுத்த அகதிகள்" விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என தெரிகின்றது. அதாவது ஐரோப்பிய நேரடித் தலையீட்டால், யுத்தம் தீவிரமடைந்தால், அகதிகளை எப்படி சமாளிப்பது என்ற Crisis Management .

ஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டத்தை உருவாக்குவதும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதும் அந்த முகாமைத்துவத்துக்குள் அடங்கும். இதற்கென பின்லாந்தில் கூடிய மகாநாடு எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியன, செல்வந்த வட ஐரோப்பிய நாடுகளுடன் சமமாக பங்கு போடா தயாராக இல்லை. மேலும் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான அகதிகளை ஒடுக்கும் சட்டம் வர நீண்ட காலம் எடுக்காது. ஷெங்கண், டப்ளின் என்று புதிது புதிதாக வரும் சட்டங்கள், ஒரு நாட்டில் நிராகரிக்கப்படும் அகதிகள், மற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட வழி வகுக்கின்றது. இதனால் வாய்ப்பற்ற அகதிகள் தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டிய நிலை. இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாட்டு மக்களின் இடப்பெயர்வு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது.

இப்படியான மாற்றங்களால், பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்தில் இருந்து, ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எஜமானர் மீது வெறுப்படையும் நிலை தோன்றும். ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது. இதை தெரிந்து கொண்டும், மூன்றாம் உலக மக்கள், தமது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதேன்? அரசியல், அல்லது யுத்த அகதிகளை தவிர்த்து விட்டு, பொருளாதார நோக்கங்களுக்காக இடம்பெயரும் மக்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.

நாடு விட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு, ஐரோப்பிய காலனித்துவ காலத்திலேயே ஏற்பட்டு விட்டது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. இந்திய,சீனக் கூலிகள் காலனிகளை வளம் படுத்த ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, மிகக் குறைந்த ஊதியம் பெறும் கூலிகள் செய்தனர். வேலை நேரத்திற்கு கூலி, ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் வசதி, மேலதிக ஊக்குவிப்புத் தொகை, என்பன இவர்களை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றை தவிர, வேலைப்பளு, வேலை நேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே தொடர்ந்தது. இவ்வாறு தான் நவீன அடிமைகள் உருவானார்கள்.

பின்-காலனித்துவ காலத்தில், காலனிப்படுத்திய ஐரோப்பிய எஜமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருந்தன. புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறிய நாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடமைச் சமுதாயத்துக்குள், சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம்பிடித்தது. புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென வளர்க்கப்பட்ட மத்தியதர வர்க்கம் வசதி படைத்திருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட பணம் என்ற மந்திரக்கோல் இருந்தது. அதன் மந்திர சக்தியைக் கண்டு வியந்த மக்கள், தாமும் அதைப் பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் ஏழைகள் என்ற போதிலும், அவர்களும் வாதியை தேடித் போயினர். "அவரவர்க்கு விதிப்படி தான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாக வாழ்பவன், மறுபிறவியில் செல்வந்தனாவான்." என்று மதங்கள் கூறிய உபதேசங்களை இன்று யாரும் நம்புவதில்லை. வசதியான வாழ்வை உத்தரவாதம் செய்யும் பணம் எனும் புதுக் கடவுளின் உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி. இவர்கள் தமது கடவுளை தரிசிக்க, அருள் வேண்டி அவர் இருக்கும் இடம் தேடித் போவதில் வியப்பில்லை.

பணக்கடவுளும் அவ்வளவு சுலபமாக அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு, ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே "அழுக்கு வேலை" செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை, தனியொருவர் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விசா இன்றி இருப்பவர் ஆயின், அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என்று பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவைகளின் இரத்ததி உறிஞ்சும் ஐரோப்பிய முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கின்றனர். மறு பக்கம் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் இருண்ட மூலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப் பற்றி யாரும் அக்கறைப் படுவது கிடையாது. மிகுந்த சிரமத்துடன் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரும் அகதிகள் இறுதியில் கண்டடைவது இதைத் தான்.

இந்த இடத்திலாவது வறிய நாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கப் போகிறோம்? நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். "எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை." எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா? உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா? மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை, அறுபது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம். கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம். குழந்தைத் தொழிலாளிகள். அசுத்தமான சேரிகள். வாக்குரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம். இது தான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.

அந்த அவலநிலை திடீரென் ஒரே நாளில் மாறி விடவில்லை. ஆளும் வர்க்கம் தானாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப் படுத்தப் பட்டனர். அடித்தட்டு மக்களிடமிருந்து ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்த போராட்டம், ஜனநாயக மயப்படுத்தலுக்கும், இன்று நாம் காணும் நலன்புரி அரசுக்கும் வழி வகுத்தது. சுருங்கச் சொல்லின், மக்கள் தமது உரிமைகளை போராடித் தான் பெற்றுக் கொண்டனர்.

மக்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணய சட்டங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமை. நிறுவனமயப் படுத்தப் படாமை. அடங்கிப் போகும் குணாம்சம். இவற்றை தமக்கு சாதகமாக எடுத்தக் கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர் வாழ்கின்றன. கலாச்சாரப் புரட்சியின் போது சீனா சென்று வந்த, இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய மக்கள், போர்க் குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச்சாரம் பற்றி கற்பிக்கப் படுகின்றது. ஆசிய மக்கள், இதற்கு மாறாக கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம் பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது."

(முற்றும்)
["உயிர்நிழல்", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]
நன்றி : http://kalaiy.blogspot.com/2010/02/blog-post_07.html

Tuesday, March 9, 2010

வெளிச்ச அழைப்புகள்

 அன்புடன் புகாரி


கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி

காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமை கட்டுகள் அறுந்து விழவேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு தொழுதிடணும்

அன்புடன் புகாரி

உலக கல்வியும் - மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தைக்கு..

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான். தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் (கட்டணம் மிக மிக குறைவு சில நூரு ரூபாய்கள் தான்).பாடம் எளிதாக இருக்கும்,பள்ளியில் கல்வி கற்கும் நேரமும் குறைவு. எனவே குழைந்தைக்கு அதிக சுமை இருக்காது, படிப்பை தவிர பிற நல்ல விஷயங்களில் (மார்க்க கல்வியை கற்க) கவனம் செலுத்த நேரம் இருக்கும். மீதமுள்ள நேரத்தில் மார்க்க கல்வியை நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்.



பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வி போதிக்க பெற்றோர்கள் ஆலிமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைத்தும் தமிழில் வந்துவிட்டன, விளகத்திற்க்கு இஸ்லாமிய ஆடியோ வீடியோ உரைகளும் இலவசமாக அல்லது ரூ.20, ரூ.30-யில் கிடைக்கின்றன (இஸ்லாமிய ஆடியோ, வீடியோ உரைகள் இலவசமாக Download செய்ய பல தமிழ் இணையதளம் இருக்கிறது) வெரும் அரபியில் குர் ஆன் ஓத கற்றுகொடுப்பது மட்டும் அல்லாமல், குர் ஆனை தாய் மொழியில் (தமிழிலோ, உருதுவிலோ) சொல்லிகொடுங்கள், பெரும்பாலான ஹதீஸ் கிதாபுகள் (புஹாரி, முஸ்லீம்), தமிழில் கிடைக்கின்றன. அதையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

ஆண்கள் வெளி நாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள பெண்களை பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிக்க சொல்லுங்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். உலக கல்வியையும் ஒழுங்காக பிள்ளைகள் படிக்கின்றனரா என கண்காணிக்கலாம்.

உண்மையிலேயே அந்த குறிபிட்ட பள்ளிகள் இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றனவா?

சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான பள்ளிகளில் போதிக்கப்படும் இஸ்லாம் , ஷிர்க் பித் அத்தை போதிக்கும் சுன்னத் ஜமாத்(?) கொள்கையைச் சார்ந்ததாகும்.

எனவே அவர்கள் போதிக்கும் இஸ்லாமிய கல்வி முழுக்க குர் ஆன் ஹதீஸ் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நபி வழி பின்பற்ற இந்த பள்ளி சரிவருமா?

இஸ்லாமிய கல்வி கற்க பள்ளிகளை சார்ந்திருப்பதால் ஏற்படும் தீய்மைகளும், நாமே போதிப்பதால் ஏற்படும் நன்மைகளும்

1. பண விரயம் : உலக கல்வியுடன் சேர்ந்த்து இஸ்லாமிய கல்வியை போதிக்கின்றோம் என சொல்லும் பெரும்பாலான கல்வி நிருவனங்கள் அதிக அளவில் பணம் வசூலிக்கின்றன. ஆனால் உண்மையான இஸ்லாத்தை போதிப்பதில்லை. பெற்றோர்களை ஏமாற்ற மாணவர்களுக்கு சில துஆக்களை சொல்லிக்கொடுத்து, பெற்றோர்களிடன் சொல்லிகாட்டி இஸ்லாமிய கல்விபோதிப்பதாக சொல்கின்றன. நாமே நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பெரும் அளவில் பணம் மிச்சமாகும்.

2. பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடக்க : இந்த காலத்தில் பிள்ளைகள் பெற்றோர்களை மதித்து நடப்பதில்லை என குற்றச்சாட்டு பெற்றோர்கள் சொல்கின்றனர். நாமே இஸ்லாமிய கல்வியை நம் பிள்ளைகளுக்கு போதித்தால், நம்பிள்ளைகள் நம் மூலம் இஸ்லாத்தை அறிந்துகொள்வதினால் நம்மீது அன்பும், பாசமும் வைத்து நம்மை மதித்து நடப்பார்கள். பெறோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு அதிகரிக்கும். பிற்காலத்தில் நம்பிள்ளைகள் நல்ல நிலைக்குவந்தால், இதற்க்கு நம் பெற்றோர்கள்தான் காரணம் என எண்ணி வயதான காலத்தில் நம்மை சிறந்த முறையில் பராமரிப்பார்கள் (இன்ஷா அல்லாஹ்). இல்லையேல் நீங்கள் எனக்கு என்ன செய்தீர்கள் என சொல்லி ஆசிரியரை மதிக்கும் அளவிற்க்கு கூட பிள்ளைகள் பெற்றோரை மதிக்காத நிலை ஏறபட்டு விடலாம்.

குடும்பமே தீய விஷயங்களில் இருந்து விலகி இருக்கலாம் : நாமே பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதிப்பதால் டிவி-போன்ற தீமையான விஷயத்தில் இருந்து நாமும் நம் பிள்ளைகளும் விலகி இருக்கலாம் (இன்ஷா அல்லாஹ்). நல்ல விஷயத்தில் நேரத்தை செலவளிப்பதால் வீட்டில் சண்டைபோட நமக்கு நேரம் இருக்காது, எனவே குடும்பத்தில் அமைதி நிலவும் இன்ஷா அல்லாஹ்.

பெற்றோர்களுடைய இஸ்லாமிய அறிவும் வளரும் : பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை போதிக்க நாம் இஸ்லாத்தை அறிந்துகொள்வது அவசியமாகும், இதனால் நமக்கும் குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் உள்ள தொடர்பு அதிகமாகும். நாமும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடந்துகொள்வோம், இஸ்லாமிய தெளிவு இருப்பதினால் கணவன் மனைவி பிரச்சனை ஓரளவிற்க்கு குறையும். இறப்பிற்க்கு பிறகு நம்முடைய வாழ்வும் சுவனத்தில் அமைய வாய்ப்பாகும் இன்ஷா அல்லாஹ்.


வீட்டில் இஸ்லாமிய கல்வி போதிக்க தடுக்கும் காரணிகள்.

1. மார்கத்தை சொல்ல ஆலீமாக இருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர், அப்படி கிடையாது, அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. உங்களுக்கு அரபி தெரியாவிட்டாலும், தற்போது தமிழிலேயே குர் ஆன் ஹதீஸ்கள் கிடைக்கின்றன. விளக்கத்திற்க்கு இஸ்லாமிய புத்தகங்களும், இஸ்லாமிய உரைகளும் கிடைக்கின்றன. இவைகளை முறையாக படித்து, பார்த்து வந்தாலே நீங்களும் ஆலீம் ஆகிவிடலாம்.

2. அடுத்து டிவி. தற்போது பெரும்பாலும் பெண்கள் டிவியிலேயே மூழ்கிவிடுகின்றனர். நேரம் அனைத்தையும் அதிலேயே செலவிடுகின்றனர், இதனால் பிள்ளைகளை கவனிக்க நேரம் இல்லாமல் போய்விடுகின்றது. வீட்டில் பிரச்சனைகள் தான் அதிகரிகின்றது. டிவிபார்க்கும் நேரத்தில் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கல்வியை போதித்தால் பிள்ளைகளும் நன்றாக வளர்வார்கள், உங்களுடைய கணவனின் பணமும் மிச்சமாகும், அந்த பணத்தில் நீங்கள் விரும்பிய நகைகளை வாங்கி அணிந்துகொள்ளலாம்.

குறிப்பு : இஸ்லாத்தில் உலக கல்வி, மார்க்க கல்வி என பிரிவினை கிடையாது. மக்கள் விளங்கிக் கொள்வதற்காக அவ்வாறு குறிபிடப்பட்டுள்ளது.

ஆக்கம் :S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவர் அணி

Monday, March 8, 2010

சங்ககால விலங்குகள் (படம்)



புவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.
இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.
இயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.
இயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.

இயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.
அதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

சங்கத் தமிழரும் விலங்கினங்களும்.


சங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.

வளர்ப்பு விலங்குகள்.

நாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.

யானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.

கழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.

யானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.

குரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..

சங்கத்தமிழரின்,

பண்பாட்டில்,
போரில்,
உணவில்,
போக்குவரத்தில்,
உவமையில்,


எனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.

சான்றாக,

கீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.


1. சகுனம் பார்த்த பன்றி

2. சிறுபிள்ளையும் பெருங்களிறும்

3. விட்டகுதிரையார்
4. அணிலாடு முன்றிலார்
5. இரும்பிடர்த்தலையார்

6. கூவன் மைந்தன்

7. இம்மென் கீரனார்

8. கொட்டம்பலவனார்.
9. துன்பத்தில் இன்பம் காண.
10. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்.
11. சங்ககால ஒலி கேளுங்கள்
12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)



நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails