Thursday, February 18, 2010

சிந்தனை சிறகுகள்




மனிதன் சிந்திக்க
தொடங்கும் போது தான்,...
வெற்றிகளை சந்திக்க
தொடங்குகிறான்,...
சிந்தனை நம் வாழ்வின்
முன்னேற்றத்தின் திறவுகோல்,...
சிந்தனை மூலமே எது சரி ?
எது தவறு ? என கண்டு தெளிகிறான்,...
சிந்திக்க தெரிந்தவனே
சாதனைகளை சந்திக்க தெரிந்தவன்,...
இன்றில் இருந்தாவது
சிந்திக்க தொடங்குங்கள்,...

நன்றி : http://thanimaiyilidhayam.blogspot.com/

டென்ஷனியலிஸ்ட்டா நீங்கள்?


நீங்கள் பொதுவாக எதற்கெல்லாம் டென்ஷன் ஆவீர்கள்?

* குளிக்க தயாராகும்போது வீட்டுக் குழாயில் நீர் வரவில்லை.

* பால்காரர் ஏழரை மணி வரை பால் போடவில்லை.

* பேப்பர் பையன் தினகரனோடு இணைப்பாக வரும் வசந்தம் போட மறந்துவிட்டான்.

* சமைக்கும்போது கேஸ் தீர்ந்துவிட்டது.

* வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள் நுழைந்து, மின்விசிறிக்கு சுவிட்சைத் தட்டினால் ‘கரெண்ட் கட்’

* முக்கியமான அழைப்பினை பேசிக் கொண்டிருக்கும்போது செல்போனில் சிக்னல் கட்.

காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆயினும் நமக்கு ஏற்படும் டென்ஷன்கள் மூன்றே மூன்றுவகைதான் தெரியுமா?

1. ஆரோக்கிய டென்ஷன் – அதீத மகிழ்ச்சியான மனோபாவமும் மன அழுத்தத்தை உருவாக்குமாம். ஆனால் இந்த மன அழுத்தத்தால் பயன்களே அதிகம். இத்தகைய மன அழுத்தமே டெண்டுல்கர் போன்ற விளையாட்டு வீரர்களை குறைந்த பந்துகளிலேயே செஞ்சுரி அடிக்க வைக்கிறது. சாதனையாளர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இது.

2. சமநிலை மன அழுத்தம் – இது நமது மனநிலையை சமநிலையாக இருக்க வைக்க உதவுகிறது. மகிழ்ச்சி, துயரம் இரண்டையும் ஒரு பார்வையில் பாவிக்கக் கூடியவர்களை கண்டு ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இன்னும் அரைமணி நேரத்தில் இந்த கட்டுரையை நான் முடித்தாக வேண்டும். இப்போது கரெண்ட் கட். மாற்று ஏற்பாடுகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்நிலையில் எனக்கு இருப்பது சமநிலை மன அழுத்தம். இது அவசியமானதும் கூட.

3. துயர் டென்ஷன் – நமக்கு வெகுவாக அறிமுகமான விஷயம் இது. இதை மட்டுமே நாம் டென்ஷனாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். முந்தைய இரண்டு டென்ஷன்களும் ஆபத்தில்லாதவை. இதுவோ ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். மயக்கம் ஏற்படுத்தும். அதிகமாக வியர்க்க வைக்கும். அடிவயிற்றிலிருந்து அபாய பந்தொன்று நெஞ்சுக்கு மேலே எழும்பும். இதை எதிர்கொள்வது எப்படி?

’மனசே டென்ஷன் ப்ளீஸ்’ நூல் இதைத்தான் எளிமையாக சொல்லித் தருகிறது. மூன்றாவது டென்ஷனிலிருந்து தப்பிக்க, நீங்களே வலிய முந்தைய இரண்டு டென்ஷன்களையும் வரவழைத்துக் கொள்வதுதான் டென்ஷனை எதிர்கொள்ள எளிய சூத்திரம். இதுவரை உங்களை ரிலாக்ஸ் ஆகதான் எல்லோரும் சொல்லித் தந்தார்கள். இந்நூலோ ‘டென்ஷன் ஆகுங்க ப்ளீஸ்’ என்று மாற்றி யோசிக்க வைக்கிறது.

டென்ஷன் ஏற்படுவதற்கான காரணிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், இவற்றை எதிர்கொள்வதற்கான உடல் மற்றும் மனரீதியான பயிற்சிகள், திட்டமிடுதல், முடிவெடுத்தல், குறைப்பதற்கான வழிகள் என்று விரிவாக பேசுகிறார் நூலாசிரியர் நளினி. விற்பனையில் எப்போதும் சக்கைப்போடு போடும் இந்நூல் இதுவரை ஐந்து பதிப்புகளை கண்டிருக்கிறது.
‘ஃபாஸ்ட் புட்’ யுகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய கையேடு இந்த சிறிய புத்தகம்.

நூல் : மனசே டென்ஷன் ப்ளீஸ்

ஆசிரியர் : நளினி பக்கங்கள் : 32 விலை : ரூ.5/-

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332924

Wednesday, February 17, 2010

குழந்தையின் மூளை, பதிவுக் களஞ்சியம்


குழந்தையின் மூளை, ஒரு பதிவுக் களஞ்சியம் அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது "புதிய" மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.நியூரோன்களின் கோர்வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள். குழந்தையின் மூளை கற்றுக் கொள்வதற்கு வசதியான கருவியாகும். குறுகிய காலத்தில் குழந்தை எல்லாம் கற்றுக் கொள்ளும். தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொண்டே போகும். எதிலும் தேடல் ஆர்வம் என கல்வி வாழ்க்கை வரை இது நீளும். நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி,விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கி வந்து விளையாட வேண்டும்.சிக்கலான நடப்புகளையும், சுற்றுச் சூழலையும் குழந்தை கள், தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்வர். அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்பார்வை. திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப் படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும் போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று குழந்தை கேட்கும் போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால், அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சி முதல் மூன்று ஆண்டுகள் வேகமாக இருக்கும். குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும், அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும். ALHAMDULILLAH

நன்றி

உளச்சோர்வு - குழந்தைகளுக்கும்...

பதிவு செய்தவர் Wafiq 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

உளச் சோர்வு பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளும் உளச்சோர்வு அடைய வாய்ப்புகள் உண்டு.
இது உணவு முறைகளில் மாற்றம் ஏற்படும் போதும் சில நடவடிக்கை மாறுதல்களாலும் ஏற்படுகிறது. தக்க தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், இது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.

இதனை தடுக்க. .
  • குழந்தைகளுக்கு கார்போகைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சமசீரானஅளவுஇருக்கக்கூடிய உணவுகளை கொடுக்கவும். கார்போகைட்ரேட்மட்டும்இருக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அந்த சக்திஎரிக்கப்பட்ட உடன்குழந்தைகள் மீண்டும் சோர்வடைவார்கள்.
  • உணவு முறைகளில் மாற்றம் ஏற்படுதலும் உளச்சோர்வுக்கு ஒருகாரணமாகஇருக்கிறது.
  • குழந்தைகள் எப்போதும் சாக்லேட் விரும்பிகளாகத்தான் இருப்பார்கள். இந்த சாக்லேட்களில் அதிகமான சர்க்கரை இருக்கின்றது. இது அலர்ஜிகளைத் தூண்டலாம். சில அலர்ஜிகள் உளச்சோர்வை ஏற்படுத்தும்.
  • மெதுவாக குழந்தைகளை வருடுதல் எப்போதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுடைய கழுத்து, கைகள், முதுகு ஆகிய இடங்களை லேசாக மசாஜ் செய்யுங்கள். அவர்களுக்கு அவர்கள் விரும்பும் கார்ட்டூன்களை காண விடுங்கள். அவர்களின் பஞ்சு நிரப்பப்பட்ட (Stuffed Dolls) பொம்மைகளை விளையாடக் கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் விளையாட்டு, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எல்லா விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

இவை உளச்சோர்விலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.. 

Filed under
நன்றிhttp://thapalpetti.blogspot.com/ 

தாய், தந்தையர்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." அல்குர்ஆன் 31:14 பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244
பெண்கள் எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல:் முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957
அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59
எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் "அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?" முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்" என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

கண்கள்

by ஹைஷ்126


கண்களை கொண்டும் திரி தோஷங்களை கண்டு பிடிக்கலாம். பொதுவாக வாயு தோஷமுடைய கண்கள் சிறியதாகவும், நிலையற்ற நிலையில் கருவிழி சுற்றிக் கொண்டு இருக்கும்.

பித்த தோஷம் உடைய கண்கள் மிக கூர்மையான, ஊடுருவும் பார்வை உடையது, கண்கள் மெருன்நிறம் அல்லது சிவந்தும் இருக்கும்.

பெரிய, அகலமான, வெள்ளையான கண்கள் (முட்டை கண்ணு) வாத தோஷத்தையும் குறிப்பிடும்.
 நன்றிhttp://haish126med.blogspot.com

நாக்கு

by ஹைஷ்126


நாக்கின் இந்த குறிப்பிட்ட பகுதி வாத, பித்த, கபத்தினை காட்டும். அது போல் நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.

கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.  மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும், பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும், வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி), நில நிறம் இதய கோளாறு, பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,

நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,

நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,

நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.

கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.


இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.
 
 நன்றிhttp://haish126med.blogspot.com/

LinkWithin

Related Posts with Thumbnails