Monday, March 13, 2017

சமூக நல்லிணக்க விருது விழா, திருநெல்வேலி

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு கிளை சார்பாக 11.03.17 அன்று திருநெல்வேலியில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் மூவரில் நானும் ஒருவன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன்.
திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கையால் அவ்விருது வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது. மாலை ஆறரை மணியளவில் மேடையில் அமர்ந்த நான் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நகர முடியாமல் இருந்தேன்! ஒன்பதைரை மணி வாக்கில் ஸ்டாலின் வந்தார்.
என் அருகில் அமர்ந்திருந்த திரு நெல்லை கண்ணன் என்னிடம் பேசிக்க்கொண்டே இருந்தார். இல்லை என்னிடம் ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார் அவர் சொன்னதில் நிறைய அரசியல் சமாச்சாரங்கள் இருந்ததால் எனக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் நான் அவரது வயதுக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு கேட்பது மாதிரியே நடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தேன்!

திடீரென்று என்னையும் பேச அழைத்தார்கள். (இது நடந்தது ஏழு ஏழரை மணி வாக்கில்). ஏற்புரை என்றார்கள். நான் சிராஜுல் மில்லத் அவர்கள் பெயரால் விருது பெருவதை பெருமையாக நினைக்கிறேன் என்றும், அவரைப் போன்ற உணர்ச்சிவசப்படாமல், அறிவார்ந்த தளத்தில் செயல்படும் தலைவர்கள் அரிது என்றும் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டேன். இரண்டு நிமிடங்கள் இருக்கலாம்.
தமிழ காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஸ்டாலினுக்கு முன்பே வந்தார். அவர் பேசுகையில் முஸ்லிம்கள் என்ன சாப்பிட வேண்டும், எந்த மொழி பேச வேண்டும் என்றெல்லாம் காவி அரசு சொல்வதைக் கண்டித்தார். அவரது பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் நேரிடையாகச் சென்று பாராட்டினேன்.
ஸ்டாலின் கொஞ்சம் அதிகநேரம் பேசினார். கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. பின் அவரும் நிறுத்தினார். என்னோடு பணி பேராசிரியர் அக்பர் அண்ணன் வந்திருந்தார். எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
என்மீது மிகுந்த அன்பு கொண்ட நண்பர்கள், சீடர்கள், அவர்களது உறவினர்கள் என சிலர் ஒளிப்படமும் வீடியோவும் எடுத்துக்கொடுத்தனர்.
அனைவருக்கும் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இத்துடன் அந்த ஃபோட்டோகளில் சில உங்களுக்காக:
Nagore Rumi



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails