Monday, September 3, 2018

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் வெற்றி கிடைக்கும்.

وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏
நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம்.
(அல்குர்ஆன் : 78:9)

நீங்கள் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது உடனை நீங்கள் எழுந்திருக்கக்கூடாது படுக்கையில் சில நிமிடங்கள் அப்படியே படுத்து கடந்து பிறகு மெல்ல எழுந்து உட்கார்ந்து கண்களை விழிக்காமல் கண்களை மூடிக் கொண்டு அங்கும் இங்கும் அசையாமல் இருந்து உங்கள் இறைவனிடத்திலும் உங்கள் ஆழ்மனதிலும் சொல்லுங்கள்


எனக்கு இன்றைக்கு என்னுடைய மிக முக்கியமான இன்ன இன்ன காரியங்கள் நடக்க வேண்டும். என்னுடைய தொழில் மற்றும் வேலையில் இவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் இதுபோலவே நோய்கள் குணமாக வேண்டும் என்று நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்று இப்படி பல... சொல்லுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கையை.

ஏனென்றால் நீங்கள் இரவில் தூங்கும்போது உங்கள் மனம் ஆன்மா இந்த பிரபஞ்ச வெளியில் கலக்கிறது பிறகு நீங்கள் தூக்கத்தில் இருந்து விழிக்கின்றபோது அதாவது நீங்கள் உங்கள் கண்களை திறக்கின்ற நேரத்தில் உங்கள் வெளி உலகத்துடன் தொடர்பு ஆரம்பமாகிறது.

وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக் கொள்ளும் நேரமாக்கினோம்.
(அல்குர்ஆன் : 78:11)

இந்த நேரத்தில் நீங்கள் இப்படி செய்கின்றபோது உங்ககளுக்கான பதில்கள் தீர்வுகள் அதற்கான செயல்கள் கிடைக்கும். உங்கள் ஆன்மா, உங்கள் காரியங்கள் நடைப்பெறக் கூடிய மனிதர்களின் ஆன்மா உடன் தொடர்பை ஏற்படுத்தி உங்களிடம் இழுத்து கொண்டு வரும். இதை நான் உங்களுக்கு சொல்வது ஏதோவொரு விதமாக தெரியலாம் இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)

எப்போதுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் உங்கள் மனம் ஆன்மா உங்களிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கத்தான் செய்கிறது ஆனால் உங்களுக்குதான் அதனிடம் தெரிவிக்க பயம். நீங்கள் தான் பிறர்கள் கூறுவதையும் அவர்கள் சொல்வதையும் தான் கேட்பீர்கள். உங்கள் மனம் ஆன்மா உங்களிடம் கேட்பதையும் சொல்வதையும் கேளுங்கள் சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் வெற்றி கிடைக்கும்.

மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails