"குறைஷிகளில் யாராவது தன் பாதுகாவலராக நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி தப்பித்து முஹம்மதிடம் வந்தால் அவரை குறைஷிகளிடம் அனுப்பி விட வேண்டும்..
ஆனால் முஹம்மதிடம் உள்ளவர்கள் யாராவது தப்பித்து குறைஷிகளிடம் வந்து விட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி
அனுப்பப்பட மாட்டார்.."
இது ஹூதைபிய்யா உடன்படிக்கையின்
ஒரு அம்சம்..
என்ன ஒரு அம்சம் இது. ஒரு சாராருக்கு சார்பாக மட்டுமே எழுதப்பட்ட உடன்படிக்கை.
ஆனாலும்
நபியவர்கள் எதுவும் சொல்லவில்லை.
ஏற்றார்கள்..
அது மட்டுமா இந்த உடன்படிக்கையை
எழுதும் போது
"இது அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது"
செய்யும் சமாதான உடன்படிக்கையாகும் என்று எழுதும் படி அலியிடம் கூற அதற்கு குறைஷி தூதுவர் சுஹைல் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை..
"முஹம்மதிப்னு அப்துல்லாஹ்" என்று எழுதுங்கள் என்று கூறினார்..
அதற்கு நபியவர்கள்
"நீங்கள் என்னை பொய்யன் என்று கூறினாலும் சரியே.."
என்று கூறிவிட்டு அலியிடம்
"ரஸூலுல்லாஹ்"
என்ற சொல்லை
அழித்து விட்டு
"முஹம்மது இப்னு அப்துல்லாஹ்"
என்று எழுதும் படி கூறினார்கள்..
ஆனால் அலி அவர்கள் அந்த சொல்லை அழிக்க மறுத்து விட நபி(ஸல்) அவர்கள் தம் கையால் அதை அழித்து மாற்றி எழுதினார்கள்..
என்ன ஒரு பணிவு என்ன ஒரு தன்னடக்கம் நபிகளின் குணம் யாருக்கு வரும்..!?
இந்த நேரத்தில் சுஹைலின் மகன் மக்காவில் இருந்து தப்பி கையில் விலங்கோடு முஸ்லிம்கள் மத்தியில் வந்து விழுந்தார்..
உடனே சுஹைல் சொன்னார்
"இந்த உடன்படிக்கை படி இவனை மக்காவுக்கு திருப்பி அனுப்பி விட வேண்டும்.."
நபிகள் சொன்னார்கள்
"நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்கவேயில்லையே.."
ஆனால் சுஹைல் அதை ஏற்றுக்கொள்ளவில்லை..
"உடனே திருப்பி
அனுப்ப வேண்டும்"
என்று உறுதியாக சொல்லி விட்டார்..
இதையும் நபிகள் ஏற்றுக் கொண்டார்கள்..
முஸ்லிம்களை
விட்டு பிரியும் போது அபூஜந்தல் மிக உரத்தக் குரலில் சொன்னார்..
“முஸ்லிம்களே! நான் இணைவைப்பவர்களிடமா திரும்ப கொண்டு போகப்படுகிறேன்?
எனது மார்க்கத்தில் என்னை அவர்கள் சோதிக்கின்றனரே!”
என்று கதறினார்.
“அபூ ஜந்தலே! சகித்துக் கொள். நன்மையை நாடிக்கொள். உனக்கும் உன்னுடன் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடுதலையையும் மகிழ்ச்சியையும் நிச்சயமாக அல்லாஹ் தருவான். நாங்கள் இக்கூட்டத்தினருடன் சமாதான உடன்படிக்கை செய்திருக்கிறோம். அதை நிறைவேற்றுவது எங்கள் மீது கடமை."
என்று நபியவர்கள் கூறி அதன் வழி நடந்தார்கள்..
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு,
(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக
நாம் உங்களுக்கு (மிகப்பெரிய)
தெளிவானதொரு
வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!) (அல்குர்ஆன் 48: 1,2)
என்ற வசனம் அருளப்பட்டது..
உடன்படிக்கை நடந்த மறு வருடம் அமர் இப்னு ஆஸ், காலித் இப்னு வலீத், உஸ்மான் இப்னு தல்ஹா போன்ற பெரும் குறைஷி தலைவர்கள் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர்.
இறைவனின் வெற்றி இப்படி தான் ஆரம்பமாகும்..
ஆரம்பமானது..
இஸ்லாமிய வரலாற்று பக்கங்களில் விட்டுக்கொடுத்தலும், பொறுமையும், சகிப்பு தன்மையும், தியாகமும் தான் அதிகம் காணப்படுகிறது..
அதுவே இஸ்லாத்திற்கு வெற்றியை தந்தது.. இஸ்லாம் வளர்ந்தது..
நபிகளும் அதைத்தான் கடைப்பிடித்தார்கள்..
நமக்கும் கற்பித்தார்கள்...
தீர்ப்பு தோல்வியை தந்தாலும் அதன் முடிவு சிறந்த வெற்றியை தரும்..
ஏற்றுக் கொள்வோம். மறைவானவற்றையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே..
கூடுதலாக கீழ்க்காணும் ஹதீஸையும் சொல்லி வைக்கிறேன்..
"மக்காவில் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட ஒருவரால் மதீனாவிற்கு வர இயலாது என்றாலும் அல்லாஹ்வின் பூமி விசாலமானது என்பதால் அவர் வேறு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதீனாவாசிகள் இஸ்லாமைப் பற்றி தெரியாமல் இருந்த போதே முஸ்லிம்கள் ஹபஷா சென்று தங்கவில்லையா? இதைத்தான் நபியவர்கள் “யார் அவர்களிலிருந்து நம்மிடம் வருகிறாரோ, அதாவது இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் வெகு விரைவில் நல்ல சூழ்நிலையையும் கஷ்டத்திலிருந்து விடுதலையும் தருவான்” என்ற சொல்லின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்கள்."
(ஸஹீஹ் முஸ்லிம்)
சிந்திப்பவர்களுக்கு இதில் சிறந்த தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.
..
Saif Saif
No comments:
Post a Comment