#முஸ்அப்_பின்_உமைர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்..!!
#மக்காவில் இறையருளால் இஸ்லாம் மார்க்கம் வருவதற்கு முன்னர் செல்வச் சீமானாக இருந்தவர்கள்.!
#விலையுயர்ந்த ஆடைகளை அணிவார்கள். உயர் ரக நறுமணப் பொருட்கள் பூசி அவர்கள் வீதிகளில் நடந்து வந்தால் முஸ்அப் பின் உமைர் வருகிறார் என்று மக்கள் கூறி விடுவார்கள்....!!
#இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமது செல்வ நிலையிலிருந்து விடுபடலானார். ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.
#அவ்வாறே தன் வாழ்வையும் அமைத்துக் கொண்டார்கள்.
#கண்மணி_ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நிலையை அறிந்து கொண்டார்கள்...!!
#தன்னுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களின் பழைய ஆடைகளைக் கண்டார்கள்.
செல்வச் செழிப்பிலிருந்த போது அவர்களிடமிருந்த அந்த நிலையையும்,,,,,
#இப்போதிருக்கும் நிலையையும் எண்ணி கண்கலங்கினார்கள்...!
#அல்லாஹ்வின் தூதர்நபி ஹபீப் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை ஏற்று முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இரண்டு ஹிஜ்ரத்திலும் பங்கேற்றார்கள்.
#பத்ர்_போரிலும், உஹத் போரிலும் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
#முதல்_அகபா உடன்படிக்கைக்கு பிறகு இறைத் தூதரின் கட்டளையை ஏற்று மதீனாவில் வாழும் அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்து மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறவும்,
#குர்ஆனை_ஓதக் கற்றுக் கொடுக்கவும் மதீனா சென்று சிறப்பாகக் கடமையாற்றினார்கள்.
#அவர்களுடைய அழைப்பினால் அதிகமதிக மக்கள் சத்திய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்....!!!
#உஹது_போரில் கண்மணி ஹபீப் நபிகளாரின் கட்டளையை மீறியதால், தோற்று ஓட்டம் பிடித்த எதிரிகள் திரும்பி வந்து முஸ்லிம்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டது.!!
#ஹபீப்_ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு அவர்கள் மரணித்து விட்டார்கள் என்ற வதந்தி கூட நிலவிற்று....,,,,
#அப்போது முஸ்அப் பின் உமைர் ரழியல்லாஹூ அன்ஹூ இஸ்லாமியக் கொடியை தமது வலக்கையில் ஏந்தி வீரமுடன் போரிட்டார்கள்.,,,
இப்னு காமியா என்பவன் அவரது வலக்கையை
வெட்டினான். முஸ்அப் பின் உமைர் ரழியல்லாஹூ அன்ஹூ கொடியை இடக்கையில் ஏந்திக் கொண்டு மீண்டும் மனம் தளராமல் போரிட்டார்கள்.
அவர்களின் இடக்கையையும் வெட்டினான் அவன்.
தமது உடலைச் சற்றே வளைத்து வெட்டப்பட்டக் கைகளால் கொடியைப் பிடித்தார்கள்.
#அப்போது ஈட்டி ஒன்று எங்கிருந்தோ வந்து அவர்களது உடலில் பாய்ந்து ஊடுருவிச் சென்றது. அவர்கள் கீழே சாய்ந்தார்கள்...,,,,
அதன் பின் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் கொடியை அலி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் கொடுத்தார்கள்...!!
#ஒரு_காலத்தில் செல்வச் செழிப்போடு வாழ்ந்த முஸ்அப் பின் உமைர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள்.,,,
#உஹதுப் போரில் ஷஹீதான,, அவர்களைப் போர்த்த ஒரே ஒரு போர்வைதான் இருந்தது..!!
#தலையை_மூடினால் கால்கள் தெரிந்தன. கால்களை மூடினால் தலை தெரிந்தது. அந்தப் போர்வையைக் கொண்டு தலையை மூடி புற்களைக் கொண்டு கால்கள் மூடப்பட்டன....!!!
#இஸ்லாமிய மார்கத்திற்காக தனது இன்னுயிரை நீத்த அந்த மாபெரும் தியாகியான முஸ்அப் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள்,,,
#இஸ்லாத்திற்காகச் செய்த தியாகத்தின் நற்கூலி இறைவனிடம் இருக்கிறது.
இதில் நமக்கு சிறந்த படிப்பினை இருக்கிறது.
#உத்தம_ஸஹாபாக்கள் அனைவருமே வாழ்க்கையின் ஏமாற்றங்களை சகித்துக் கொண்டு மறுமை வாழ்வின் வெற்றிக்காகவே உழைத்தார்கள்...!!
#இஸ்லாம்_மார்க்கம் செழிக்க போர்க்களம் சென்று , தியாகங்கள் பல செய்தார்கள்...!!
#மறுமை_வாழ்வின் வெற்றி என்ற இலட்சியத்தை நோக்கி பயணித்தார்கள்...!!
#அவர்களுடைய நற்கூலி அவர்கள் ரப்பிடத்தில் சொர்க்க சோலையாகும்.!
அதில் நிரந்தரமாக அவர்கள் இருப்பார்கள்...!!
#அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்.
அவனை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள். தம்முடைய ரப்பை அஞ்சியவர்க்கே கிடைக்கும்..!! (அல்குர்ஆன் 98:8)
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
ஸித்றத்துல் முன்தஹா
No comments:
Post a Comment